NEET: 'மாபெரும் உயிர்கொல்லும் Scam'- தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி தற்கொலை; உதயநிதி இரங்கல்

Jun 20, 2026 - 08:02
0
NEET: 'மாபெரும் உயிர்கொல்லும் Scam'- தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி தற்கொலை; உதயநிதி இரங்கல்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கோபிகா என்ற மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்த அவர், இந்த ஆண்டும் தேர்வை எதிர்கொண்டிருந்தார். எனினும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் மறுத்தேர்வு - மாணவி தற்கொலை
நீட் மறுத்தேர்வு - மாணவி தற்கொலை

இதனால் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றத்தாலும், மீண்டும் தேர்வை எதிர்கொள்வதில் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் கோபிகா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவிக்கு இரங்கல் தெரிவித்து நீட் தொடர்பாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User