"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

Jun 19, 2026 - 21:00
0
"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப்.

அந்தப் பேட்டியின் ஒரு பகுதியாக ட்ரம்பிடம் உங்களுக்குப் பிடித்த உலகத் தலைவர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெயரைக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

மோடியை 'மிகக் கடுமையான மனிதர்' என்றும், ஜின்பிங்கை 'முற்றிலும் தொழில்முறை சார்ந்தவர்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

அந்தப் பேட்டியின் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான உறவு குறித்து பேசும்போது, '"நன்றாக இருந்தது தான். ஆனால், அவரை கொஞ்சம் நிதானமாக வைத்துக்கொள்ள பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், "இஸ்ரேலுக்கு என் மீது நிறைய மரியாதை இருக்கிறது. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இன்று இருக்காது" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User