"ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்றாங்க!" - கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

May 13, 2026 - 15:01
0
"ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்றாங்க!" - கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

கருப்பு படம்
கருப்பு படம்

இப்படத்தின் புரோமோஷனுக்காக, படக்குழுவினர் ஹைதராபாத், கேரளா எனச் சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி, "மலையாளம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மலையாள சினிமாவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய படங்கள்ல மலையாள சினிமா நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்கள்ல எப்போதுமே நடித்திருப்பாங்க.

அதுபோல, இந்தப் படத்திலும் இந்திரன்ஸ் நடிச்சிருக்காரு. அவர் இந்திய சினிமாவுக்கே கிடைச்ச கிஃப்ட். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நிறைய கனெக்ஷன்ஸ் இருக்கும். நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும்.

இப்போ சமீபத்துலகூட, எங்க ஊர்ல நிறைய கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்ணினாங்க. உங்க ஊர்ல ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. எங்களுக்கு நல்ல முதல்வர் கிடைச்சிட்டாங்க.

ஆர்.ஜே பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி

உங்களுக்கும் கூடிய சீக்கிரம் நல்ல முதலமைச்சர் கிடைக்க வாழ்த்துகள். இரண்டு மாநிலங்களிலும் சூர்யா சாருக்கு அன்பைக் கொடுப்பீங்க. இங்க வந்ததும், கேரளா சூர்யா சாருக்கு எவ்வளவு ஸ்பெஷல், கேரளாவுக்கு சூர்யா சார் எவ்வளவு ஸ்பெஷல் என்பதும் புரிஞ்சது.

இந்தப் படம் நடிக்கிறதுக்காக மட்டும் சூர்யா சார் ஓகே சொல்லல. தடையில்லாமல் ஷூட்டிங் நடப்பதற்கும், இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடப்பதற்கு, ரிலீஸ் ஆகுறதுக்குனு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க.

ஹைதராபாத்துல நடைபெற்றிருந்த நிகழ்வுல நான், 'இந்தப் படம் தியேட்டர் ஆடியன்ஸுக்கான படம்'னு சொல்லியிருந்தேன். ஆனால், அதையே திசைதிருப்பி வேற மாதிரி அடிக்கிறாங்க. இந்தப் படத்துக்குக் கொண்டாட்டத்திற்கான மனநிலையோடு வாங்க" எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User