"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

Sep 21, 2026 - 12:30
0
"கேள்வி கேட்டா பரவாயில்ல, பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது?" - தவெகவைச் சாடிய உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி கேட்பார்கள். மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். அதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் எல்லோரும் பதில் சொல்வார்கள்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

அப்படிப் பதில் சொன்னால் எதிர் கேள்வி கேட்கலாம். பேச்சுக்குப் பேச்சாக இருக்கும். பாட்டு பாடினால் நாங்கள் என்ன பண்ணுவது? பிக் பாஸ் போட்டிக்கு நிகராக சட்டமன்றத்தை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சட்டசபையின் மாண்பை இன்றைய ஆளுங்கட்சியினர் கெடுத்துவிட்டார்கள்.

துறைசார்ந்த எந்தக் கேள்விக்கும் அமைச்சர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். சபாநாயகர் பொதுவாக எதிர்க்கட்சியினரை அதிகமாகக் குறைசொல்வார்கள். ஆனால் இந்த முறை ஆளுங்கட்சி அமைச்சர்கள் தவறாகப் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் அதிகமாக நீக்கி இருக்கிறார். இந்தச் சாதனை இந்த அரசுக்கு உண்டு" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User