ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

Jun 21, 2026 - 08:02
0
ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் - இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே - லெபனான் உள்ளிட்ட எந்த முனைகளிலும் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பது தான்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லாத இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

முன்பு, போர் பாதிப்புகளை ஈடு செய்யும் என்று ஈரான் கூறி வந்தது.

அதற்குப் பதிலாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு...

"போர் நிறுத்தக் காலமான 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீர்ச்சந்தியில் எவ்வித சுங்கக் கட்டணமும் இருக்காது. இந்த 60 நாட்கள் முடிந்த பிறகும் கூட கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் முழுமையடையாமல் போனால், கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலச் செலவுகளை ஈடுகட்டும் விதமாக... மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு 'காவல் தூதனாக' (Guardian Angel) செய்த சேவைகளுக்காக, அமெரிக்காவால் மட்டுமே சுங்கக் கட்டணங்கள் விதிக்கப்படலாம்".

ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டாலும், ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்காக ஈரானில் இருந்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச்சிற்கு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User