"இந்திய பங்குச்சந்தை இன்னும் ஏறும்; AI வளர்ச்சி தான் முக்கிய காரணம்" - ஆனந்த் மஹிந்திரா விளக்கம்
ஏ.ஐ துறையில் சறுக்கலால் கடந்த வாரம் உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்தைக் கண்டது.
ஆனால், ஏ.ஐ துறையில் இன்னும் இந்தியா பெரிதாக எந்தப் பங்களிப்பையும் செய்யாததால், இந்தியப் பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் ஸ்டெடியாக ஏற்றத்தைக் கண்டது.
இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 6), மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “உலகப் பங்குச் சந்தைகளின் நடனத்தைப் பார்த்தால், அது ஒரு வினோதமான நாடகக் கூத்து போல உள்ளது!

தலைகீழான நிலைமை!
சில மாதங்களுக்கு முன்பு, செய்திகளின் தலைப்பு இப்படித்தான் இருந்திருக்கிறது:
‘ஏ.ஐ குறித்த பாசிட்டிவ் எதிர்பார்ப்பால் ஆசியாவின் பிற பகுதிகள் செழித்து வளரும் வேளையில், இந்தியப் பங்குகள் மட்டும் தான் ஒற்றைக் கருப்புப் புள்ளியாகப் பின்தங்கியுள்ளன.’
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்!
AI குறித்த அச்சத்தால் ஆசியாவின் பிற பகுதிகள் வீழ்ச்சியடையும் போது, இந்தியா மட்டும் தான் ஒரே பிரகாசமான புள்ளியாக நிமிர்ந்து நிற்கிறது!
அதே சந்தைகள்தான். அதே AI தொழில்நுட்பம்தான். ஆனால் சந்தையின் மனநிலை மட்டும் முற்றிலும் மாறிவிட்டது.
இன்றைய காலத்தில் பங்கு விலைகளை விட வேகமாக மாறுவது, அந்த விலையேற்ற இறக்கங்களுக்குச் சொல்லப்படும் சமாதானக் காரணங்கள் மட்டுமே போலிருக்கிறது!” என்று பதிவிட்டிருந்தார்.
ஏ.ஐ துறை சரிவுதான், அந்தத் துறையில் பங்கேற்காத இந்திய சந்தையைக் கடந்த வாரம் முன்னோக்கி நடத்தியது என்று பொருளாதார நிபுணர்களால் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய ஏ.ஐ வளர்ச்சியில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (நவம்பர் 10), “உலக முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் இந்தியாவின் பக்கம் திரும்பியிருப்பதைப் பற்றியும், அதன் பின்னணியில் உள்ள நகைமுரண் குறித்தும் சமீபத்தில் நான் பதிவிட்டிருந்தேன்.

அளவுக்கு அதிகமாக ஏறுமுகத்தைக் கண்டுள்ள ஏ.ஐ சந்தையின் வர்த்தகத்திற்கு வெளியே இந்தியா இருப்பதே இதற்கு ஒரு காரணம் என்றும் பார்க்கப்பட்டது.
ஆனால், இதை அணுகுவதற்கு மற்றொரு கோணமும் இருக்கிறது.
உலகளாவிய AI வளர்ச்சியில் இந்தியாவுக்கு 3-வது இடத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இப்போது அளித்துள்ளது.
உண்மைதான், உலகின் மிக அதிநவீன சிப்களை நாம் தயாரிப்பதில்லை. அடிப்படை LLM மாதிரிகளை உருவாக்கும் பந்தயத்திலும் நாம் முன்னணியில் இல்லை.
இருப்பினும், டெக் மஹிந்திராவின் ஆண்டு அறிக்கையில் நான் பயன்படுத்திய ஓர் உவமைதான் நினைவுக்கு வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் ஒரு தளத்தை உருவாக்கின. ஆனால் செயலிகளே அவற்றின் உண்மையான ஆற்றலை வெளிக்கொண்டு வந்தன.
ஏ.ஐ சூழலுக்கு ஏற்ப ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், ‘தொழில்நுட்பத்தை விடுங்கள். அதைச் சுற்றியுள்ள பயன்பாடும் தான் இங்கு எல்லாம்!’
ஏ.ஐ செயலிகளின் உண்மையான பிரதிபலிப்பு, அந்தத் துறை சார்ந்த சிறப்பறிவு மற்றும் நிறுவனம் சார்ந்த விரிவான பயன்பாடுகள் ஆகியவற்றில் தான் இனிவரும் காலங்களில்தான் முழுமையாக வெளிப்படக்கூடும்.
I recently posted about the irony of India coming back into favour with global investors, partly because we were seen as being outside the supposedly overheated AI trade. But perhaps there’s another way to look at it. Stanford now ranks India #3 in global AI vibrancy. No, we don’t make the most advanced chips or lead the race in foundational LLMs. But I’m reminded of an analogy I used in Tech Mahindra’s Annual Report. Smartphones created the platform. Apps unlocked their potential. James Carville famously said, “It’s the economy, stupid!” Perhaps the AI version should be, “It’s the ecosystem, stupid!” The real explosion of applications, domain expertise & enterprise-wide deployment may still lie ahead. And with our software talent, systems integration expertise & enormous domestic market for AI use cases, surely India has a promising hand to play? Perhaps India isn’t just a refuge from the AI hype. It may have a compelling AI opportunity of its own. And if that’s true, the renewed interest in Indian equities may have more staying power than we think…
— anand mahindra (@anandmahindra) November 10, 2026
நம்மிடம் இருக்கும் மென்பொருள் திறமை, கணினி ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் ஏ.ஐ பயன்பாடுகளுக்கான பிரம்மாண்டமான உள்நாட்டுச் சந்தை ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது, நிச்சயம் இந்தியாவின் கையில் ஒரு வலுவான சீட்டு இருக்கிறது அல்லவா?
ஒருவேளை இந்தியா என்பது ஏ.ஐ குறித்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு புகலிடம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் ஈர்க்கக்கூடிய ஒரு சொந்த ஏ.ஐ வாய்ப்பும் ஒளிந்திருக்கலாம்.
இது உண்மையென்றால், இந்தியப் பங்குகளின் மீது மீண்டும் உருவாகியிருக்கும் இந்த ஈர்ப்பு, நாம் நினைப்பதை விட நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)