பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

Sep 12, 2026 - 17:30
0
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது.

வைரம் பதித்த தங்க வளையல் உட்பட உயர் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதை அடுத்து அமீஷா பட்டேலின் தாயார் ஆஷா படேல், இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

ஆஷா படேல், தனது வீட்டில் வேலை செய்யும் சீமா காடே இத்திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்டு நகைகளைத் திருப்பித் தருமாறு சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்களாக அவரிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல்
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல்

அவர் திருடியதைத் திரும்பக் கொடுக்காததால் ஆஷா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். இது குறித்து போலீஸார் மர்ம நபர் மீதுதான் ஆரம்பத்தில் புகாரைப் பதிவு செய்தனர். அதன் பிறகு சீமா மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரைத் தேடினர்.

அவர் வீராரில் இருப்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமீஷா பட்டேல் வீட்டில் சீமா வேலை செய்து வந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சீமாவிடமிருந்து திருடப்பட்ட வளையல் மற்றும் இதர தங்க ஆபரணங்களை இன்னும் மீட்கவில்லை என்றும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து அமீஷா பட்டேல் கூறுகையில், திருட்டு நடந்தது உண்மைதான் என்றும், இப்போது வீட்டுப்பணிப்பெண் சிறையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்க வளையலைக் கடந்த ஜனவரி மாதம் திருடியதாகக் கூறப்படுகிறது. அமீஷா பட்டேல் கடைசியாக 2024 இல் வெளியான ஆகாஷாதித்ய லாமா இயக்கிய தௌபா தேரா ஜல்வா படத்தில் நடித்திருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User