'எனக்கு ஸ்டாராக வேண்டும்!' - தொடக்க கால பட வாய்ப்புகளை ஷாருக் நிராகரித்தது குறித்து இயக்குநர் ஆனந்த்

Nov 02, 2026 - 18:31
0
'எனக்கு ஸ்டாராக வேண்டும்!' - தொடக்க கால பட வாய்ப்புகளை ஷாருக் நிராகரித்தது குறித்து இயக்குநர் ஆனந்த்

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஷாருக் கான், தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் வணிக ரீதியாக தான் ஒரு பெரிய 'ஸ்டார்' ஆக வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்ததாகவும், அதனாலேயே பல ஆழமான கலைத்தன்மை கொண்ட பட வாய்ப்புகளைத் திட்டமிட்டே நிராகரித்ததாகவும் பிரபல இயக்குநர் ஆனந்த் மஹேந்த்ரு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஆனந்த் மஹேந்த்ரு
ஆனந்த் மஹேந்த்ரு

தொடக்க காலத்தில் ஷாருக் கானுடன் நெருங்கிப் பழகியவரும், புகழ்பெற்ற இயக்குநருமான ஆனந்த் மஹேந்த்ரு 'Indian Express' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஷாருக் கான் தனது லட்சியங்களில் எப்போதுமே மிகத் தெளிவாக இருப்பார். ஒருமுறை புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் பாசு பட்டாச்சார்யா, ஷாருக் கானை ஒரு கலை நயம் மிக்க அறிவுப்பூர்வமான படத்தில் நடிக்க அழைத்தார்.

ஆனால், ஷாருக் கான் அந்த வாய்ப்பை இன்முகத்துடன் மறுத்துவிட்டார். அப்பொழுது அவர் பாசு பட்டாச்சார்யாவிடம், 'எனக்கு இதுபோன்ற அறிவுப்பூர்வமான படங்களில் நடிக்க விருப்பமில்லை. இண்டஸ்ட்ரியில் அந்த மாதிரி நடிக்க ஏற்கனவே பல நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

ஆனால், நான் ஒரு பெரிய ஸ்டாராக மாற வேண்டும் என்பதே என் லட்சியம்' என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். அவர் என்ன செய்ய வேண்டும், சினிமாவில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே தெளிவுடன் செயல்பட்டதே அவரை இன்று இந்த உயரத்தில் அமர வைத்திருக்கிறது" என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User