"விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" - 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா

Jun 22, 2026 - 12:31
0
"விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" - 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'நூறு சாமி' படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.

விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷா எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கும், தன்னுடைய நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்து நடிகை ஸ்வாசிகா கண்கலங்கியவாறு ஒரு காணொளியில் பேசி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நூறு சாமி படத்தில்...
நூறு சாமி படத்தில்...

நடிகை ஸ்வாசிகா பேசுகையில், "எல்லாத் தமிழ் மக்களுக்கும் வணக்கம்! இந்த நிமிஷத்துல நன்றியைத் தவிர வேற எதுவும் எனக்குச் சொல்ல வரல. அதை எப்படி வார்த்தையால உங்ககிட்ட விவரிக்கிறதுன்னும் தெரியல.

என் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க. 'லப்பர் பந்து', 'மாமன்னன்' என நான் நடிச்ச எல்லாப் படங்களுக்கும் எனக்கு அந்த சப்போர்ட் கிடைச்சது.

இப்போ 'நூறு சாமி' படத்துக்கு நீங்க கொடுக்கிற அன்பு ரொம்ப பெரியது! எப்படி என்னை நம்பி இவ்வளவு பேர் தியேட்டருக்கு வந்தீங்கனு உண்மையாகவே எனக்குத் தெரியல.

சசி சார்... எப்படி என் மேல நம்பிக்கை வச்சு இவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்தாரு, விஜய் ஆண்டனி சார் அதுக்கு எப்படி ஒத்துக்கிட்டாருனும் தெரியல.

எல்லாமே எனக்கு ஒரு கனவு மாதிரி ஃபீல் ஆகுது. ஆனா, இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் இத்தனை காலம் காத்துட்டு இருந்தேன். நான் தாங்கிப் பிடிக்கிற, நான் ஹீரோயினா நடிச்ச ஒரு படம் இத்தனை தியேட்டர்கள்ல ஓடுது.

அதை இவ்வளவு பேர் ரசிச்சுப் பார்க்கிறாங்க. நான் ஒரு நாள் கூட இதைக் கனவு காணாம தூங்குனதே இல்லை. இன்னைக்கு அதெல்லாமே நிஜமாகியிருக்கு. தமிழ் ஆடியன்ஸ் எனக்குப் பெரிய சப்போர்ட் கொடுக்கிறாங்க.

இதுக்கு நன்றி என ஒரு வார்த்தையில முடிச்சிட முடியாது. என்னுடைய ஆக்சிஜனே இப்போ நீங்கதான்! நீங்க கொடுக்கிற இந்த அன்புக்கு நான் எக்காலத்துக்கும் கடன்பட்டிருக்கேன்.

இனிமேல் இன்னும் பொறுப்போட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். 'இந்த படத்துக்கு நீங்கதான் ஹீரோ'ன்னு சொல்லி இப்போ நிறையப் பேர் எனக்குக் கால் பண்றாங்க, மெசேஜ் அனுப்புறாங்க.

உங்க எல்லாருக்குமே என் மனமார்ந்த நன்றிகள். 'நூறு சாமி' என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒரு படம். இந்தப் படம் பேசும் விஷயங்களும் ரொம்ப முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு படத்துக்குப் பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கீங்க.

ஒரு நடிகையாக எனக்கு இதே மாதிரி எப்போதும் உங்க பாசத்தைக் கொடுங்க. நான் கண்டிப்பா இன்னும் கடினமாக உழைச்சு, உங்களை ஏமாற்றாம நிறைய நல்ல கேரக்டர்கள்ல நடிப்பேன்" எனக் கண்கலங்கியவாறு பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User