'சி.ஜோசப் விஜய் எனும் நான்..!' - தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் தவெக தலைவர் விஜய்!

May 10, 2026 - 11:01
0
'சி.ஜோசப் விஜய் எனும் நான்..!' - தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் தவெக தலைவர் விஜய்!

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மே 4-ம் தேதி முடிவுகள் வெளியானது.

இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சியின் உதவியை நாடியது தவெக.

இந்த அனைத்து கட்சிகளின் ஆதரவு நேற்று உடன் கிடைக்க, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் உடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்.

அர்லேகர் - விஜய்
அர்லேகர் - விஜய்

ஆட்சி அமைக்கவும் ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய். ஆளுநரும் விஜய்யின் கோரிக்கையை ஏற்றுகொண்டார்.

இதையடுத்து இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடந்து வருகிறது.

அதில் தவெக விஜய், 'ஜோசப் விஜய் எனும் நான்' என்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

அதுவும் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜய்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User