Harry Potter TV Series: 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பாணியில் ஹாரி பாட்டர்! HBO-வின் புதிய முயற்சி!

Sep 04, 2026 - 12:00
0
Harry Potter TV Series: 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பாணியில் ஹாரி பாட்டர்! HBO-வின் புதிய முயற்சி!

'மாயாஜாலம்' என்ற ஃபேண்ட்டஸி உலகத்தை ஹாரி பாட்டர் என்ற பெயரில் ஏழு பாக நாவலாக செதுக்கியவர் ஜெ.கே.ரெளலிங். இந்நாவலை தழுவி, 2001-ல் ஆரம்பித்து 2011 வரை ஹாரி பாட்டர் திரைப்படம் எட்டு பாகங்களாக வெளிவந்தன. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை அளித்தது‌.

இந்த நிலையில், HBO தொலைக்காட்சி நிறுவனம் "ஹாரி பாட்டார் அண்ட் தி பிளாசப்பர்'ஸ் ஸ்டோன்" என்ற புதிய தொடரை தயாரித்திருக்கிறது. இதன் முதல் சீசனின் டீஸர் (செப் 3) அன்று யூட்டியூப்பில் வெளியாகி ரசிகர்களை வியப்பிலும், எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. திரைப்படமாக வெளியான 'ஹாரி பாட்டார்' இன்னும் விரிவான கதை சொல்லலுடனும், கேரக்டர்களின் பிண்ணனியை ஆழமாக அலசும் 'டீவி சீரியஸாக' உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Harry Potter - ஹாரி பாட்டார்

புதிய கதாபத்திரங்கள் !

முன்பு நாம் பார்த்தது 'டேனியல் ராட்க்ளிஃப்'-ன் ஜெனரேஷன், இனி நாம் பார்க்க இருப்பது நியூ ஜெனரேஷன். கதையின் கருவில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் புதிய கதாபாத்திரங்களை கொண்டும், புதிய வடிவத்தோடும் இந்த கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

புத்தகங்கள் படங்களை விட மிக நீண்டது. அதை தழுவி புத்தகத்தின் உள்ளடக்கத்தை அப்படியே திரைக்கு மாற்றும் போது சிக்கலுக்குள் தள்ளப்படுகிறார்கள். நேரம் பற்றாக்குறை காரணமாக புத்தகத்தில் உள்ளவற்றை சுருக்கியும் அல்லது முற்றிலுமாக நீக்கப்பட்டும் தான் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் புத்தகத்தில் உள்ளதை உள்ளபடியே சுவாரஸ்யமாக சொல்லும் மற்றுமொரு போக்கு தான் 'டீவி சீரிஸ்'. அதைத்தான் இப்பொழுது கையில் எடுத்துருக்கிறது HBO நிறுவனம். இதில், எந்தவொரு சுருக்கமும், நீக்கமும் இல்லாமல் கதையை சொல்வதால்.. கதையின் ஆழத்தை இன்னும் கூர்மையாகவும், கேரக்டர்களின் முழுப் பிண்ணனியையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். 8 எபிஸோடுகளை உள்ளடக்கிய முதல் சீசன் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியிட தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

HBO Max

ஏன் எச்பிஒ (HBO) ?

HBO படங்கள் மட்டுமன்றி, பல நீண்ட தொடர்களை எந்தவொரு தடைகளும் இல்லாமல் படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து, அதன் அசல் தன்மையை வெளிக்கொணர்வதில் மிக பெரிய அங்கம் வகித்து வருகிறது. அதற்கு மிகப்பெரிய சாட்சி 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர்தான்.

புத்தகத்தின் முதல் பாகத்தை இரண்டரை மணிநேர திரைப்படமாக எடுத்திருந்தார்கள். இப்படியே தான் 8 பாகங்களும். ஆனால் தற்போது புத்தகத்தின் முதல் பாகத்தையே 8 எபிசோடுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அதிக ஸ்பேஸ் இருப்பதால் இன்னும் விசாலமாக புத்தகத்தை மிக அருமையாக திரைக்கு மாற்ற முடியும். ஆனால் இதிலும் பல சிக்கல்கள் உள்ளது புதிய கதாப்பாத்திரங்கள் மனதோடு ஒட்ட வேண்டும், 8 எபிசோடுகள் என்றால் போர் அடிக்காமல் உட்கார வைக்க வேண்டும். இந்த சாவல்கலை பக்குவமாக கையாண்டுவிட்டால் கண்டிப்பாக சீரிஸ் 'ஹிட்' தான்.

Harry Potter
Harry Potter

இருப்பதை சிதைக்காமல் இருந்தால் போதும்!

ஒரு பக்கம் ரசிகர்கள் பலரிடமிருந்து 'என்னதான் சீரிஸாக வந்தாலும் பழைய கேரக்டர்கள் மாதிரி இருக்காதுப்பா, ஒவ்வொரு கேரக்டர்களின் பெயரை கேட்டாலே பழைய ஆட்களின் முகம் தான் ஞாபகம் வந்து போகும்' என்ற குரல்களும் கேட்கிறது.

திரைப்படங்கள் என்றென்றும் ஒரு அடையாளச் சின்னமாக நிலைத்திருக்கும். ஹாரி பாட்டர் கதையை மீண்டும் முழுமையாகச் சொல்ல நினைக்கிறோம். அதனால் புத்தகத்தில் உள்ள பல விஷயங்களை உள்ளடக்கும் வகையில் போதுமான நேரங்களை எடுத்துக் கொண்டுள்ளோம்' என்று எச்பிஒ நிறுவனம் சீரிஸை பற்றி கூறியுள்ளது.

'சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்', 'ப்ரிசனர் ஆஃப் அஸ்கபான்' என இப்படியே 7 புத்தகத்தின் பாகங்களும் தொடர்கிறது. ஏற்கனவே சீசன் 2-வான 'சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்' தற்போது உருவாகிவருதும் குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User