Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?
தங்க இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ (FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளுக்குப் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் என்றால் என்ன?
கோல்டு இ.டி.எஃப் என்பது நீங்கள் உங்களது பணத்தை நேரடியாகக் குறிப்பிட்ட நிறுவனத்தின் தங்க யூனிட்டுகளில் முதலீடு செய்வதாகும்.
கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் என்றால், நேரடியாக நீங்களே தங்க யூனிட்டுகளில் முதலீடு செய்யாமல், உங்களது பணத்தை அசட் மேனேஜ்மென்ட் கம்பெனியிடம் (AMC) தருவீர்கள். அவர்கள் சந்தையில் வர்த்தகமாகும் கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்வார்கள்.

எந்தக் கோல்டு இ.டி.எஃப் நிறுவனம் நன்கு வர்த்தகமாகி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகப் பொதுமக்களான நமக்குத் தெரியாது.
ஆனால், அசட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளுக்கு நன்கு தெரியும். அதனால், பெருமுதலீட்டாளர்கள் அவர்கள் வழியே சந்தையில் தங்கத்தை முதலீடு செய்வார்கள்.
இப்போது அதற்குத்தான் ‘செக்’ ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் என்ன?
கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸில்...
> இன்று முதல் (அக்டோபர் 16), புதிய பல்க் (Lumpsum) முதலீடுகளைச் செய்ய முடியாது.
> புதிய எஸ்.ஐ.பிக்களைத் தொடங்க முடியாது.
> ஏற்கெனவே உள்ள எஸ்.ஐ.பிக்களில் ஸ்டெப்-அப் செய்ய முடியாது.
ஆனால், ஏற்கனவே கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸில் எஸ்.ஐ.பி போட்டு வருபவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் அப்படியே தங்களது முதலீடுகளைத் தொடரலாம்.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸிற்கு மட்டுமே, கோல்டு இ.டி.எஃப்களுக்கு இல்லை.
அதனால், கோல்டு இ.டி.எஃப்களில் புதிய எஸ்.ஐ.பியைத் தொடங்கலாம்... ஏற்கனவே உள்ள எஸ்.ஐ.பிக்களையும் அப்படியே தொடரலாம்.

இந்தக் கட்டுப்பாடுகளை எந்தெந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன?
> ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்
> ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்
> டாடா மியூச்சுவல் ஃபண்ட் (Tata Mutual Fund)
> கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் (Kotak Mahindra Mutual Fund)
> ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Axis Mutual Fund)
உள்ளிட்ட 17 நிறுவனங்கள்.
ஏன் இந்தக் கட்டுப்பாடு?
நாம் கோல்டு இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும்போது, நாம்தான் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்கிறோம். ஆனால், அந்த இ.டி.எஃப் நிறுவனங்கள் நாம் முதலீடு செய்வதற்கு இணையான பிசிக்கல் தங்கத்தைத் தங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
இது கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸுக்கும் பொருந்தும்.
ஒரு ஆண்டிற்கு பொதுமக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்தியப் பிரதமர் மோடி கோரிக்கை வைத்ததும், தங்க இறக்குமதியைக் குறைக்கத் தங்கம், வெள்ளிக்கான சுங்க வரியை மத்திய அரசு 15 சதவிகிதமாக அதிகரித்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் எதற்கோ, அதே காரணம்தான், கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸின் கட்டுப்பாடுகளுக்கும்.
இப்போதே தங்க முதலீடுகள் அதிகரித்துக்கொண்டுள்ளன. பண்டிகை சீசன் வேறு வந்துவிட்டது.
இதனால், நம் மக்கள் தங்கத்தில் இன்னும் அதிக முதலீடுகளைக் குவிப்பார்கள். தங்கம் முதலீடுகள் அதிகமாகும்போது, இந்த நிறுவனங்கள் அதே அளவுக்குத் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும்.
இப்போதுதான் ஓரளவு நமது இந்திய ரூபாய்யின் மதிப்பு வலுவாகி வருகிறது. இந்த நேரத்தில், தங்கம் ‘இறக்குமதி’யில் அதிக டாலர்களைக் குவித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவிழக்கும்.
இந்தியாவின் அந்நியச் செலாவணியும் குறையும். இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் செபி அசட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளுக்கு வழிமுறைகளைச் சொல்லியுள்ளது.
நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?
இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் பெருமுதலீட்டாளர்களும், கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸில் முதலீடு செய்பவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
கோல்டு இ.டி.எஃப்பில் எஸ்.ஐ.பி போட்டு வருகிறீர்கள், இனிதான் எஸ்.ஐ.பி தொடங்கப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)