தீயால் விழித்த காடு! - குறுங்கதை

Mar 10, 2026 - 20:02
 0
தீயால் விழித்த காடு! - குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பல்வேறு வளங்களை பெற்றது சமரசக்காடு. அந்த காட்டில் வசிக்கும் அணிலின் வீட்டிற்கு விருந்தாளியை வந்தது ஒரு எலி(சமன்). 

"அண்ணே, உங்க காடு ரொம்ப அழகா இருக்கு, மரத்துக்கு கீழே நிறைய பழங்களும் விழுந்து கிடக்குதே. யாரும் எடுக்க மாட்டாங்களா?"

"சமன். இப்போ காட்டுல பெரும் பிரச்சினை நடக்குறதால பதற்றமான சூழல் நிலவுது. இதனால சின்ன மிருகங்கள் எதுவும், வெளியில வரது இல்ல. நீ முன்கூட்டியே இன்னக்கி வரப்போற செய்தி சொன்னதால, வேற வழி இல்லாமா உன்னையே கூட்டிட்டு போறேன்"

"அண்ணா  எனக்கு ரொம்ப பயமா இருக்கு, சண்டையெல்லாம் எனக்கு வராது. நா இப்படியே என் காட்டுக்கு போயுடுறேன்"

 வேம்பு குச்சிகளால் செய்யப்பட்ட சில அம்புகள் வேகமாய் நடந்து சென்ற சமன், அணில் முன்னால் விழுந்தன. உடனே அணில், சமனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த புதர் மண்டிய பகுதிக்குள் ஒளிந்து கொண்டன. அங்கு அருகில் ஓடிய நரி ஒன்றை சிறுத்தை கூட்டங்கள், அம்புகள் எய்து கொன்றன. அதை பார்த்த சமன் மிகவும் பயந்து போனான்.

 பின் அவனை அழைத்து கொண்டு அணில் ஆலமரத்தில் இருந்த கூட்டிற்கு வந்தது. அதன் பின்னும் அலறல் சத்தங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கேட்டன.

 இருள் சூழ்ந்ததும், அணில் சேமித்து வைத்த கொய்யா பழம் ஒன்றை, சமனுக்கு கொடுத்தது. தன் பற்களால் பழத்தை கொதறி கொதறி தின்றான். அப்போது அங்கு வந்த சிட்டுக்குருவி "அண்ணே, என்கிட்ட இருந்த உணவெல்லாம் தீர்ந்து போச்சு. உங்க கிட்ட ஏதாவது இருந்தா தரீங்களா?" என்று பாவமாய் கேட்டது.

அணில் தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த ஒரு பழத்தை பிளந்து ஒரு பாதியை சிட்டுக்குருவிக்கு தந்து, இரவு உறங்கவும் அனுமதி கொடுத்தது. 

மூவரும் சாப்பிட்டு முடித்ததும்,

 "அண்ணே, என்ன காரணத்திற்காக காட்டிற்குள் சண்டை"

"காட்டின் பலசாலி சிங்கமா? யானையா? என்பதில் தொடங்கிய சிறிய சண்டை தான் சமன். இதில் யானையுடன் சேர்ந்த சிறுத்தை சிங்கத்தின் கூட்டாளிகள் மீதும் சண்டையிட தொடங்கியது. இதனால் கோபமான சிங்கமும் அதன் கூட்டாளிகளும் ஒட்டுமொத்த காட்டு விலங்குகளையும் அழித்திட போர் தாக்குதலை நடத்துகின்றன"

"ஆமாம். சமன்.  நாங்கள் இருந்த மரத்தின் மேல் மான் கொம்புகளை வீசியதில், என் அம்மா இறந்து விட்டார்" என்று சிட்டுக்குருவி சோகத்துடன் கூறியது. 

"சரி. சரி. பேசுனது போதும் ரெண்டு பேரும் தூங்குங்க" என்று அணில் கூறியது.

ஆதவனின் கதிர்கள் சமரசக்காட்டில் விழும் முன்னே காடு பிரகாசமாய் தீயில் எரிந்தது. அணில், உறக்கத்தில் இருந்த சமனையும், சிட்டுக்குருவியையும் எழுப்பிக் கொண்டு, மலை உச்சியை நோக்கி பயணித்தது. காட்டின் அத்துனை விலங்குகளும் மலை உச்சி நோக்கி நடக்கையில் குரங்கு , "நமக்குள் நாம் சண்டையிட்டு கொண்டிருந்ததால் தான், பக்கத்து காட்டினர்  நம் வளமான காட்டிற்கு தீ வைத்து விட்டனர்" என்று கூறி அழுதது. "குரங்கு அண்ணே சொல்றது சரிதானே சமரசக்காடுன்னு பெரு இருந்தா போதுமா? சமரசம் போற மனம் வேணும்ல" என்று சமன் கூட்டத்தில் சென்று கொண்டே பேசினான். 

 எல்லோரும் மலை உச்சிக்கு வேகமாய் சென்றிட, யானை அருவி நீரை எடுத்து தீயை அணைத்தது. அதே போல் சிங்கம், சிறுத்தை இரண்டும் தங்கள் மேல் குரங்குகளை ஏற்றி கொண்டு, அவை  குடுவையில் நீரை அள்ளி தீயில் ஊற்றின. இப்படியாக அனைத்து விலங்குகளும் சேர்ந்து, காட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தன. 

நாம் ஒற்றுமையாக இருப்பதுதான் நம் பலம் என்பதை விலங்குகள் உணர்ந்தன.

-சி.விக்கனராஜ்

தேர்தல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0