பட்டாசு வெடித்ததில் தகராறு: குடியரசுத் தலைவர் மாளிகை பாதுகாப்பு வீரர் மீது துப்பாக்கிச் சூடு!

Nov 11, 2026 - 09:31
0
பட்டாசு வெடித்ததில் தகராறு: குடியரசுத் தலைவர் மாளிகை பாதுகாப்பு வீரர் மீது துப்பாக்கிச் சூடு!

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர். இவருக்கு வயது 26. இவர் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து தன்னுடைய ஊரான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோபால்பூர் கடானாவிற்குச் சென்றிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இரவு 10 மணியளவில் சௌரப் தோமர் தன்னுடைய குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சௌரப் தோமர்
சௌரப் தோமர்

அப்போது, ‘பட்டாசு வெடிக்கக்கூடாது’ என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் தீரஜ் மற்றும் மோனு (இருவரும் சகோதரர்கள்) ஆட்சேபனைத் தெரிவித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் சௌரப்பின் அண்ணன் வினீத்திடம் (28) வாக்குவாதம் தொடங்கியுள்ளது.

வாக்குவாதம் பிரச்னையாக மாற, தீரஜ் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார் என்று கூறப்படுகிறது.தீரஜ் சுட்ட தோட்டா சுவரில் பட்டு சௌரப்பின் தலையில் பட்டுள்ளது.

இதன் பிறகு, வினீத்தைத் தாக்கிவிட்டு, தீரஜ் மற்றும் மோனு தப்பிச் சென்றிருக்கின்றனர். சௌரப்பை அவரது குடும்பம் மருத்துவமனையில் அனுமதிக்க, அந்தத் தோட்டா அகற்றப்பட்டிருக்கிறது. இப்போது சௌரப் உடல்நிலை சீராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

தீரஜ் மற்றும் மோனு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User