``தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று " - ஜெயக்குமார் சொல்வது என்ன? | Live Updates

Jun 17, 2026 - 09:01
0
``தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று " - ஜெயக்குமார் சொல்வது என்ன? | Live Updates

வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

18-ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்? தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா? மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு TVK அரசின் மீது உண்டான வெறுப்பை திசை திருப்பவா? அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்!? திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன? தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள். ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. - அதிமுக ஜெயக்குமார்

வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

''தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும்,

“ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும், உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்'' - தங்கம் தென்னரசு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User