தேர்தல் 2026: `கோத்தகிரி'யை மையம் கொள்ளும் நீலகிரி அரசியல் களம்!‌

Apr 4, 2026 - 10:31
 0
தேர்தல் 2026: `கோத்தகிரி'யை மையம் கொள்ளும் நீலகிரி அரசியல் களம்!‌

ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) என மூன்றே‌ மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருக்கும் நீலகிரியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான ஊட்டி சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக களமிறங்க வேண்டும் என அந்தந்த கட்சிகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் முட்டி மோதி வந்தனர். பல எதிர்ப்புகளையும் மீறி பிரதான கட்சிகளால் ஊட்டி தொகுதி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி
கோத்தகிரி

அதேவேளையில் இந்த தேர்தலில் நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் களம் கோத்தகிரியை மையம் கொண்டிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது. குன்னூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக கோத்தகிரியைச்‌ சேர்ந்த மாவட்ட செயலாளர் கே.எம். ராஜூ களம் காண்கிறார். குன்னூர் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் கோத்தகிரியைச் சேர்ந்த சாந்தி ராமு களமிறங்கியிருக்கிறார்.

அதேவேளையில் ஊட்டி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக உயிலட்டி ராமச்சந்திரன், ஊட்டி தொகுதி பா.ஜ.க வேட்பாளராக இட்டக்கல் போஜராஜ், குன்னூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ஆகியோரும் கோத்தகிரியைச்‌ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0