Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Jun 22, 2026 - 10:30
0
Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற்பயிற்சி செய்யாதவர்கள் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பிரச்னைகள் வருமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

புரோட்டீன் (புரதச்சத்து) என்பது நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான மேக்ரோ நியூட்ரியன்ட்... அதாவது பேரூட்டச்சத்து. நம் உடலுக்கு மூன்று பேரூட்டச்சத்துகள் மிகவும் முக்கியம். அவை கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து. கார்போஹைட்ரேட் என்பதுதான் நம் உடலுக்கு முதன்மையான எரிபொருள் ஆதாரம் (Primary fuel source) ஆகும். புரதச்சத்து என்பது முக்கியமாக தசைகளை மீட்டெடுப்பதற்கும் (Muscle recovery) தசை வளர்ச்சிக்கும் மிகவும் தேவையானது. நல்ல கொழுப்புகள் (Good fats) என்பவையும்  நம் உடலுக்கு எரிபொருள் ஆதாரம்தான்.

பொதுவாக நம் இந்திய உணவு முறையை (Indian diet) எடுத்துக்கொண்டால், அதில் கார்போஹைட்ரேட்தான் அதிகமாக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில்  சோறு தான்  அதிகம் இருக்கும். காய்கறிகளும் புரோட்டீனும் ரொம்பவும் குறைவாகவே இருக்கும்.

அப்படி இருக்கும்போது, கார்போஹைட்ரேட் எல்லாம் உடலில் குளுக்கோஸாக மாறும். எனவே, அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் சாப்பிடுவது, நீரிழிவு நோய் (Diabetes), உடல் எடை அதிகரிப்பது (Weight gain) போன்ற பிரச்னைகளுக்குக் காரணமாகும். எனவே, எல்லோரும்  தங்களுடைய உணவில் புரோட்டீனை சேர்த்துக் கொள்வது கட்டாயமாகும்.

உடற்பயிற்சி
தினமும் உங்களால் பனீர், டோஃபு, சன்னா போன்ற உணவுகளைச் சாப்பிட்டு புரோட்டீனைப் பெற முடியாவிட்டால், அதற்கு மாற்றாக புரோட்டீன் டிரிங்க் (Protein drink) குடிப்பது தவறே இல்லை.

நீங்கள் வொர்க்அவுட் (உடற்பயிற்சி) செய்யாவிட்டாலும் புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ் (Protein supplements) எடுத்துக்கொள்வது ஏன் என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். நம்முடைய அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ளும் புரோட்டீனின் அளவு குறைவாகவே உள்ளது. நம்மால் தினமும் அந்த அளவிற்கு புரோட்டீனைச் சாப்பிட முடிவதில்லை.  அதாவது தினமும் உங்களால் பனீர், டோஃபு, சன்னா போன்ற உணவுகளைச் சாப்பிட்டு புரோட்டீனைப் பெற முடியாவிட்டால்,  அதற்கு மாற்றாக புரோட்டீன் டிரிங்க் (Protein drink) குடிப்பது தவறே இல்லை. இதை நீங்கள் வொர்க்அவுட் பண்ணினால் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

வொர்க்அவுட் செய்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்பட  சில காரணங்கள் உண்டு. புரோட்டீன் டிரிங்க்ஸ் தசைகளை மீட்டெடுக்க (Muscle recovery) உதவுகிறது. வொர்க்அவுட் செய்பவர்கள் அல்லது உடலமைப்பை மேம்படுத்தும் இலக்கு (Body goals) கொண்டிருப்பவர்களுக்குப் புரோட்டீன் இன்னும் அதிகமாகத் தேவைப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வொர்க்அவுட் செய்கிறீர்களோ இல்லையோ, உங்களால் அன்றாட உணவின் மூலம் தேவையான புரோட்டீனைச் சாப்பிட முடியாத பட்சத்தில், புரோட்டீன் டிரிங்க் சாப்பிடுவது நல்லதுதான். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை. 

வே புரோட்டீனா (Whey protein) அல்லது பட்டாணியிலிருந்து பெறப்படும் புரோட்டீனா (Pea protein), உங்களது உடலுக்கு எது செட் ஆகிறது, எது உங்களது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நீங்கள் வாங்கலாம்.

ஆனால், நீங்கள் எந்த வகையான புரோட்டீனைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள்தான் மதிப்பிடவேண்டும். அதாவது, அது எந்த மாதிரியான குவாலிட்டி புரோட்டீன்... வே புரோட்டீனா (Whey protein) அல்லது பட்டாணியிலிருந்து பெறப்படும் புரோட்டீனா (Pea protein), உங்களது உடலுக்கு எது செட் ஆகிறது, எது உங்களது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பார்த்து நீங்கள் வாங்கலாம்.

எனவே, புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதை எடுப்பதற்கு முன் உங்கள் உடலைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மருத்துவப் பரிசோதனைகள் (Medical check-up) செய்து, உங்களுக்கு அலர்ஜி (Allergies) எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, எந்த பிராண்ட் உங்களுக்கு செட் ஆகிறது என்று பார்த்து நீங்கள் தாராளமாக புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User