போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

Apr 17, 2026 - 21:31
 0
போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள V.O சிதம்பரம் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

UPSC/TNPSC
UPSC/TNPSC

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr.M. ரவி IPS, (DGP முன்னாள் காவல் ஆணையர் தாம்பரம் காவல் ஆணையரகம்) சிறப்புரை ஆற்ற இருக்கிறார். அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா? ஸ்மார்ட் லேர்னிங் அவசியமா? என்பது குறித்து பேசிய King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், " உண்மையில், பாடத்திட்டம் (Syllabus) என்பது ஒரு தேர்வின் உயிர்நாடி போன்றது. எனவே, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் என்பது மிகவும் முக்கியம்.

ஆனால், அனைத்துப் பகுதிகளையும் ஒரே சீராகப் படிப்பதை விட, அதிக வினாக்கள் கேட்கப்படும் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைத் திரும்பத் திரும்பப் படிப்பதே புத்திசாலித்தனம்.

கிங்மேக்கர்ஸ் அகாடமி இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்
கிங்மேக்கர்ஸ் அகாடமி இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்

நீங்கள் ஐஏஎஸ் முதல் எந்தத் தேர்வை எழுதினாலும், முதலில் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை ஆழமாக அலசி ஆராய வேண்டும். கேள்விகள் எந்தப் பகுதியிலிருந்து, எப்படி கேட்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதுதான் உங்கள் தயாரிப்பின் முதல் படியாக இருக்க வேண்டும்.

ஒரு தேர்வில் வெற்றி பெற, அனைத்துப் பாடங்களையும் நீங்கள் படிக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதில் உங்களுக்குப் பிடித்தமான அல்லது எளிதான 3 முதல் 4 முக்கியப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்தது.

உதாரணமாக, யுபிஎஸ்சி தேர்வில் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் எனப் பல பாடங்கள் இருந்தாலும், உங்களுக்குப் பிடித்தமான பாடங்களில்முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மற்ற பாடங்களில் நீங்கள் ஓரளவுக்கு கவனம் செலுத்தி படித்தால் போதுமானது.

ஆனால் எதையும் புறக்கணிக்காமல் படிக்க வேண்டும். உங்களுக்கு ஆங்கிலம் கடினமாக இருந்து, கணிதம் எளிதாக இருந்தால், உங்கள் கவனத்தை கணிதத்தில் அதிகமாக்குங்கள். பிறர் ஒரு பாடத்தைப் படிக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதையே படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று தெரிந்துகொண்டு படிக்க வேண்டும்" என்றார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

Loading…

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0