திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

May 18, 2026 - 12:32
0
திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னைம மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 இடங்களில் திமுக தோல்வியடைந்திருக்கிறது.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

திமுக தோல்வியுற்ற இடங்கள் அதற்கான காரணங்கள் என்ன? கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக-வின் மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கோர்ஸ் கரெக்ஷன் ஸ்டெப் 1 (Course Correction Step1)” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வயசு என்ன?... ஆடி வந்தா 67 வரும்... ஆடி வரதுக்கு முன்னாடியே உன் பாடி வந்துரும் போல.

 எழிலன் - திமுக
எழிலன் - திமுக

இன்னும் நீ இந்த சீட்ல உட்காந்து தேச்சுனு இருக்கிற. இனி இந்த இந்த கைரா நாட்டிற்குள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது...அண்ணா திடீர்ன்னு சொன்னா நாங்க எங்க போவது?” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தான் எழிலன் வலியுறுத்துகிறார் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User