அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

Mar 23, 2026 - 16:02
 0
அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.

இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர்.

சென்னையில் பியூஸ் கோயல்...
சென்னையில் பியூஸ் கோயல்...

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார்.

கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி முடிவு செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவரம் வெளியாகி வருகிறது.

அதிமுக அலுவலகத்தில் தினகரன்....
அதிமுக அலுவலகத்தில் தினகரன்....

அதன்படி அதிமுக கூட்டணியில்

பாஜகவுக்கு 27 தொகுதிகளும் , (கடந்த முறை 20 தொகுதிகள்)

பாமகவுக்கு 18 தொகுதிகளும், (கடந்த முறை 23 தொகுதிகள்)

அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0