CSK vs MI: "அவங்களை அவுட் ஆக்க நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்கணும் போல!" - ஹர்திக் ஆதங்கம்

May 03, 2026 - 11:28
0
CSK vs MI: "அவங்களை அவுட் ஆக்க நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்கணும் போல!" - ஹர்திக் ஆதங்கம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, "இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன்.

CSK vs MI Match
CSK vs MI Match

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அவர்கள் எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்தோம்.

ஆனால் 10 ஓவர்களுக்குப் பின் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை.

பவுலிங்கில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், பேட்டிங்கில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை.

இதற்கு மேல் எப்படி ஆக்ரோஷமாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர்களை அவுட் ஆக்க நாங்கள் நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்க வேண்டும் போல.

CSK
CSK

எங்களிடம் இருந்த பந்துவீச்சு வாய்ப்புகளை வைத்து நாங்கள் முயன்றோம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினார்கள்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User