முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

Oct 28, 2026 - 11:30
0
முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸாரின் வேனில் அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டபோது, வெளியில் நின்றுகொண்டிருந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் `தலைவரே... அன்னைக்கே அவனை கரூர்ல போட்டுருந்தால் இன்னைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா..’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கத்தி கூச்சலிட்ட காட்சிகள் வெளியாகின.

தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன்

விசாரணையில் அவர், வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் எனத் தெரியவந்தது. காட்பாடியில் வசித்து வரும் சரவணன், தி.மு.க-வில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறார்.

இதையடுத்து, புழல் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தி.மு.க கவுன்சிலரைக் கைது செய்ய தேடுதல் வேட்டையில் இறங்கினர். கைதுக்கு பயந்து அவர் தலைமறைவான நிலையில், தனிப்படை போலீஸார் விழுப்புரத்தில் வைத்து சரவணனை கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து கரூர் சம்பவம் தொடர்பாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User