CJP: 'தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்'!- கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம்|Live Updates
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்திருக்கிறார்.

'ஜந்தர் மந்தரில் உங்களை யெல்லாம் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு புத்தகத்தையும் நமது மூவர்ணக் கொடியையும் எடுத்து வர மறக்காதீர்கள்!' என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் அபிஜீத் திப்கே பதிவிட்டிருக்கிறார்.
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.
நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

இதில் குகேஷ் தனது 34 ஆவது நகர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பதக்கம் வெல்லும் போட்டியில் 0.5 புள்ளிகள் பின் தங்கியுள்ள பிரக்ஞானந்தா கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
இந்நிலையில் பரபரப்பாக நடந்த 10-வது சுற்றின் முடிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) தோற்கடித்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)