ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு செக்; சீனாவிற்கு நிதி கொடுத்தால் வங்கிகளுக்குத் தடை; அமெரிக்கா எச்சரிக்கை

May 03, 2026 - 11:29
0
ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு செக்; சீனாவிற்கு நிதி கொடுத்தால் வங்கிகளுக்குத் தடை; அமெரிக்கா எச்சரிக்கை

ஒரு பக்கம் அமெரிக்கா போர் தொடுத்தும், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டும் ஈரானுக்கு நெருக்கடி தந்து வருகிறது. ஆனால், இன்னொரு பக்கம், ஈரானிடம் இருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து நிதி உதவி செய்து வருகிறது.

இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சீனா மீது கடும் அதிருப்தி.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் கருவூலத் துறை, அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, ஈரானிய எண்ணெய் வாங்க சீனா நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அல்லது உதவும் அமெரிக்க வங்கிகள் மீது இரண்டாம் நிலை தடைகள் பாயும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ஈரானுக்கு சீனா உதவி?!

சீனாவைப் பொறுத்தவரை, அதன் அரசாங்கம் சார்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது.

'டீபாட் ரிஃபைனர்ஸ் (Teapot Refiners)' என்று அழைக்கப்படக் கூடிய சிறு, தனியார் எண்ணெய் நிறுவனங்கள்தான் ஈரான் எண்ணெய்யைப் பெரும்பாலும் வாங்குகின்றன.

அமெரிக்காவின் அறிக்கையில், "ஈரான் ஏற்றுமதி செய்யும் 90 சதவிகித எண்ணெய்யை சீனாதான் வாங்குகிறது.

இந்த எண்ணெய்யை சீனா டீபாட் ரிஃபைனர்களை வைத்து வாங்குகிறது.

இந்த ஏற்றுமதி மூலம் ஈரானுக்குக் கிடைக்கும் வருமானத்தை, அது ஆயுதங்களிலும், ராணுவத்திலும் முதலீடு செய்து, பலனடைகின்றது" என்று கூறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

ஏதேனும் அமெரிக்க வங்கிகள் சீன நிறுவனத்திற்கு நிதி கொடுத்து, அந்த நிதி ஈரான் எண்ணெய் வாங்க பயன்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட வங்கி மீது தடை பாயும் என்பதே அமெரிக்க அரசாங்கத்தின் எச்சரிக்கை.

இதனால், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க வங்கிகள் அளிக்கும் நிதி எதற்கு செல்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்... தொடர்ந்து கண்காணியுங்கள் என்று அமெரிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User