B.Com பட்டப்படிப்போடு CA/CMA: மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் RD கல்லூரி!

May 12, 2026 - 20:32
0
B.Com பட்டப்படிப்போடு CA/CMA: மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் RD கல்லூரி!

+2 தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தேடுதலில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு படிப்புகள் பல உயர் தர கல்வி நிறுவங்கள் மூலமாக வழங்கப்படுகின்றது.

மாணவர்கள் அவர்களுடைய விருப்பம், அவர்களுடைய திறன் மற்றும் நல்ல சம்பளத்துடன் நிரந்தர வேலை வாய்ப்பை வழங்கும் துறை போன்றவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம் பிரகாசிக்கும்.

RD College of Commerce and Professional Studies
RD College of Commerce and Professional Studies

இன்றைய காலகட்டத்தில் Accounting, Finance, Auditing, Tax Compliances வேலைகளை செய்யவதற்கு Degree படித்த மாணவர்களின் திறன் மட்டும் போதுமானதாக இல்லை. இதனால் B. Com படித்த மாணவர்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய ஒரு நிரந்தர வேலை வாய்ப்பை பெறுவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவர்களுடைய பொருளாதார தேவைகளுக்காக ஏதாவது ஒரு வேலையை தேர்ந்தெடுக்கின்றனர்.

அந்த வேலையும் அவர்களுடைய நிதித்தேவையை பூர்த்தி செய்யவதாக இல்லை. இந்த நிலையை போக்க மாணவர்கள் அவர்களுடைய பட்டப்படிப்பை முடிக்கும் காலத்திலேயே இந்த துறையில் நிபுணத்துவம் வழங்கும் Chartered Accountancy அல்லது Cost and Management Accountancy போன்ற professional courses படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் RD College of Commerce and Professional Studies என்ற கல்வி நிறுவனம் மாணவர்கள் B. Com பட்டப்படிப்போடு CA அல்லது CMA படிப்பையும் ஒருங்கிணைந்து படிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மூன்றாண்டு கால இறுதியில் பாரதியார் பல்கலைகழகம் வழங்கும் Degree யோடு உலகத்தரம் வாய்ந்த CA அல்லது CMA தகுதிப்படிப்பில் முதல் இரண்டு நிலைகளான Foundation மற்றும் Intermediate எனப்படும் இரண்டு நிலைகளையும் முடித்து Semi Qualified Professional என்ற தகுதியோடு இந்த துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறுகின்றனர். மேலும் அரசாங்க வேலைவாய்ப்பை விரும்பும் மாணவர்கள் அதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று நிரந்தர வேலை வாய்ப்பையும் பெற முடியும்

B.Com General, B.Com Accounts and Finance, B.Com Professional Accounting, B.Com Finance போன்ற உட்பிரிவுகளில் B.Com பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் Chartered Accountant படிப்பையும் B.Com Banking and Finance தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் Cost and Management Accountant படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். இதனால் மாணவர்கள் Articleship training தொடர்ந்து Finals எனப்படும் இறுதி நிலையையும் முடித்து இந்த துறையில் மேலும் பல சாதனைகளை புரியும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

உலகத்தரம் வாய்ந்த CA மற்றும் CMA படிப்புகளுக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேல் முழு நேர பயிற்சி நிறுவனமாக செயல்படும் Erode மாவட்டம் பெருந்துறையில் உள்ள National Management கல்லூரியின் விரிவாக்கமே RD College of Commerce and Professional Studies. Erode மாவட்டம் விஜயமங்கலத்தில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 2026 - ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிக்க எதுவாக கல்லூரி வளாகத்திலேயே வீட்டு சூழலில் உணவு, காற்றோட்ட மான சூழலில் தங்கும் அறை மாற்றும் Laundary போன்ற அனைத்து வசதிகளுடனும் பாதுகாப்பான Hostel வசதியும் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User