'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா?

Mar 21, 2026 - 11:01
 0
'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' - 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு திறப்பதில்லை.

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகள் எரிப்பொருள் தட்டுப்பாடால் திணறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த நேரத்தில் ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் எண்ணெய்க்கு அனுமதி

இது குறித்து அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கருவூலம் அனுமதி அளிக்கிறது. இது குறுகிய கால அனுமதி மட்டுமே.

தற்போது, குறைந்த விலைக்கு தடை செய்யப்பட்ட ஈரான் எண்ணெயை வாங்கி சீனா பதுக்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்காட் பெசென்ட்
ஸ்காட் பெசென்ட்

இப்படி ஏற்கெனவே கப்பலில் இருக்கும் ஈரான் எண்ணெய் வாங்க அனுமதிப்பதன் மூலம், உலக சந்தைக்குள் கிட்டத்தட்ட 140 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அமெரிக்கா கொண்டு வருகிறது.

சப்ளை மீது ஈரான் ஏற்படுத்தியுள்ள தற்காலிக அழுத்தத்தையும் குறைக்கிறது.

ஈரான் எண்ணெயை அனுமதித்து உலக அளவில் எண்ணெய் விலையைக் குறைப்பதோடு, போரைத் தொடர்ந்தும் டெஹ்ரானுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுப்போம்.

அமெரிக்காவின் செயல்

ஈரான் எண்ணெய்க்கான தற்காலிக அனுமதி ஏற்கெனவே கப்பல்களில் உள்ள ஈரான் எண்ணெய்களுக்கு மட்டுமே... புதிதாக உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கோ, புதிதாக வாங்கவோ அல்ல.

மேலும், ஈரான் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்த முடியாதப்படி, அமெரிக்கா அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும்.

இதுவரை, உலக சந்தைக்கு ட்ரம்ப் அரசாங்கம் 440 மில்லியன் கூடுதல் பேரல்களைக் கொண்டு வந்துள்ளது".

முதலில் தடை விதித்திருந்த ரஷ்ய எண்ணெய்களுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா. இப்போது ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளித்துள்ளது.

ஈரான் போரில் உலக அளவிலான எண்ணெய் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குக் கடும் நெருக்கடியாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0