`வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

Mar 2, 2026 - 13:02
 0
`வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்'  - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

 'காதல் ரீசெட் ரிப்பீட்'
'காதல் ரீசெட் ரிப்பீட்'

இந்தப் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், "எப்போதுமே தம்பி ( ஏ.எல். விஜய்) எனக்கு பெயர் வாங்கி தரக்கூடிய கதாபாத்திரத்தைத் தான் தருவார். தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து எந்த ஒரு கர்வமும் இல்லாமல் செய்யக்கூடியவர்.

இந்தப் படம் என் வாழ்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத படம். நான் வீடு கட்டிக்கொண்டிருக்கும்போது பணப்பற்றாக்குறையாக இருந்தது.

அந்த சமயத்தில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சொல்லி இருந்தார்கள். ஆனால் கமிட் ஆகாமல் இருந்தேன்.

எந்தவித ஒரு தடையும் இல்லாமல் பேசிய அந்த சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை உடனே எனக்கு அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து 'வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' என சொல்லி ஆதரவு அளித்தவர் தம்பி விஜய் அவர்கள்.

ஏ.எல் விஜய்
ஏ.எல் விஜய்

நாங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை. ஆனால் நான் தம்பி என்று பாசமாக அழைப்பேன். அவர் என்னை அண்ணன் என்று பாசமாக அழைப்பார்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0