Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்
ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆபத்தான இடத்தில் வார இறுதியைக் கொண்டாட வந்த மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது மாணவிக்கு, அதுவே அவரது கடைசிப் பயணமாக மாறியுள்ளது.
பங்கி ஜம்பிங் விளையாடத் தயாரான அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கயிறு ஏதும் மாட்டாமல், அங்குள்ள ஊழியர்கள் 130 அடி உயரத்திலிருந்து அப்படியே கீழே தள்ளிவிட்ட அதிரவைக்கும் அலட்சியம் நெஞ்சை உலுக்கும் கொடூரமாக அரங்கேறியுள்ளது.
JUST IN: 21-year-old dies after workers forget to attach safety rope and push her off 40-meter bridge in São Paulo’s Limeira, Brazil pic.twitter.com/ceqniPJkUs
— Rapid Report (@RapidReport2025) June 13, 2026
இந்த விபத்து நிகழ்ந்த உடனே, அந்தப் பகுதியில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த ராய்சா டயஸ் என்ற செவிலியர், சேறும் சகதியுமாக இருந்த செங்குத்தான மலைப்பாதை என எதையும் பொருட்படுத்தாமல், அவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கயிற்றின் உதவியோடு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.
நூற்று முப்பது அடி உயரத்திலிருந்து மிகக் கொடூரமாகக் கீழே விழுந்த பிறகும், அந்த மாணவி சில நிமிடங்கள் உயிருடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மரியாவிடம் பேசிய செவிலியர், "என் ஷிஃப்ட்டில் யாரும் இறக்க மாட்டார்கள், நீ பிழைத்துவிடுவாய்" என்று தைரியம் கூறி முதலுதவி வழங்கி அவரைக் காப்பாற்றத் தீவிரமாகப் போராடியுள்ளார்.
எனினும், ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, கடுமையான உள் காயங்கள் காரணமாக அந்த மாணவியின் உயிர் பிரிந்தது.
The woman who was thrown off a 130-foot bridge without a cord in Brazil was still alive when an off-duty nurse got to her on the ground.
— Collin Rugg (@CollinRugg) June 15, 2026
"I even talked to her... I told her, 'Nobody dies on my shift.' Even though I wasn’t on my shift..." said nurse Rayza Dias.
Three of the… pic.twitter.com/oEAzusrFV2
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்ற இருவர் உட்பட மூன்று ஊழியர்களை பிரேசில் நாட்டுப் போலீசார் தற்பொழுது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர். அரசு உரிமமும், முறையான பாதுகாப்பு நெறிமுறைகளும் இல்லாமல் நடத்தப்பட்ட இந்தச் சாகசப் பயணம், ஒரு இளம் மாணவியின் உயிரைப் பறித்ததோடு சர்வதேச அளவில் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)