Bigg Boss 10: ஜேசனின் EVP தியாகம்; அஷ்மிதா செய்த அட்டகாசமான கொலைகள்- இந்த வாரம் என்ன நடந்தது?

Nov 09, 2026 - 13:30
0
Bigg Boss 10: ஜேசனின் EVP தியாகம்; அஷ்மிதா செய்த அட்டகாசமான கொலைகள்- இந்த வாரம் என்ன நடந்தது?

அஷ்மிதாவும் அக்ஷிதாவும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இருவரின் பெயர்களை எழுதும் போதெல்லாம் சமயங்களில் குழப்பம் வரும். இனி அந்தப் பிரச்சினை இல்லை. 

அஷ்மிதா எப்போதோ எலிமினேட் ஆகியிருக்க வேண்டியவர். முகேஷூடன் லவ் டிராக் செய்தது, அவினாஷ் கோபப்படும் போதெல்லாம் தடுத்தது போன்றவற்றைத் தவிர அக்ஷிதா  வேறு எதையும் செய்யவில்லை. 

ஆக.. இந்த முறை இரண்டுமே அவசியமான எவிக்ஷன்கள்தான். ‘நீங்க புடுங்கினது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” என்று பிக் பாஸ் டீமிடம் நாம் தைரியமாக சொல்லலாம். 

bigg boss 10
bigg boss 10

9வது வாரத்தில் என்ன நடந்தது?

வினோத்தும் அன்சரும்தான் தன்னிச்சையாகவே இந்த ஷோவின் தருணங்களை தங்களின் நகைச்சுவையால் சுவாரசியப்படுத்துகிறார்கள். அதிலும் அசார் அடிக்கும் கமெண்ட்டுகள் ரகளையானவை. ‘திருந்துங்கடா’ டாஸ்க்கின் வகுப்பறையில் வாசனும் அவினாஷூம் எதிரும் புதிருமாக நெருங்கி நிற்க வேண்டி வந்த போது ‘Now you can kiss the bride’ என்று நகைச்சுவை மத்தாப்பை கொளுத்தினார் அன்சர்.

இரண்டு கொலைகள் நடந்து முடிந்த நிலையில் வீடு திகைப்பாக இருந்தது. ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு பிக் பாஸ் வருகையின் போது “பாஸ்.. காலைல இருந்து உங்கள் குரல் கேட்கலை. உங்களையும் கொலைகாரன் போட்டுட்டான்னு நெனச்சேன்” என்று அன்சர் அடித்த கமெண்ட்டிற்கு பிக் பாஸிற்கே உள்ளூற சிரிப்பு வந்திருக்க வேண்டும். இது போல பல சம்பவங்களை ரகளையாக செய்தார் அன்சர். இன்னொரு பக்கம் ‘கொய்யால என்னடாங்கடா’ என்று விஎஸ் ராகவன் குரலில் வாரம் முழுவதும் அதகளம் செய்து கொண்டிருந்தார் வினோத் பாபு. 

அன்சர் மற்றும் வினோத்தைப் போல் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தாமல் மற்ற போட்டியாளர்கள் பெரும்பாலும் சும்மா இருப்பதால் டாஸ்க் மூலம் வலுக்கட்டாயமாக அவர்களை செயல்பட வைக்க பிக் பாஸ் டீம் பாடு பட வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் ‘திருந்துங்கடா’ அகாதமி வீக்லி டாஸ்க் சுவாரசியம். செயல்படாத போட்டியாளர்களை ‘திருந்துங்கடா’ என்று பிக் பாஸ் சொன்னதாகவும் இதைப் பார்க்கலாம். பேருந்தில் பல்பொடி விற்பவரைப் போல ஒரு பையை மாட்டிக் கொண்டு வி.எஸ்.ராகவன் வாய்ஸில் வாரம் பூராவும் பேசி அனத்தினார் வினோத். உடலை வினோதமான அசைத்து மனோபாலாவின் மாடுலேஷனை பிடித்தார் அன்சர். இருவருமே அசத்தி விட்டார்கள். 

நடிகர் கார்த்திக் மாடுலேஷனில் பிருத்வி, குடிகாரனின் குழறலான வாய்ஸில் முகேஷூம் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆங்கிலோ இந்தியன் தமிழில் பேசி அசத்தினார் ஷாதிகா. வயதான மைனராக பெண்களிடம் வழியும் பாத்திரத்தை அர்ப்பணிப்புடன் செய்தார் ஜேசன். ஆனால் சீரியஸ் முகம் அவருக்கு செட் ஆவது போல காமெடி ரோல் சரியாக வரவில்லை. 

bigg boss 10
bigg boss 10

அஷ்மிதா செய்த அட்டகாசமான கொலைகள்

‘குழந்தை மூஞ்சுல ஒரு கொலைகாரி’ என்று விசேவால் பாராட்டப்பட்ட அஷ்மிதாவின் மர்டர்கள் சிறப்பானவை. ‘பிக் பாஸ் சீசன்லயே மொபைல் போன் உபயோகிச்ச ஒரே போட்டியாளர் நானாத்தான் இருப்பேன்’ என்று எவிக்ஷனின் போது சிரித்துக் கொண்டே சொன்ன அஷ்மிதா, ஒவ்வொரு கொலையையும் நிதானமாக ரசித்துக் கொண்டே செய்த விதம் பாராட்டத்தக்கது. 

‘பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரியும் இவர்தான்’ என்று அஷ்மிதாவின் முகத்தில் வடியும் பாலிற்காகத்தான் அவரை கொலையாளியாக பிக் பாஸ் தேர்வு செய்திருப்பார் போலிருக்கிறது. பல வாரங்கள் சும்மாவே இருந்து ‘இவரெல்லாம் ஏன் இன்னமும் இருக்கிறார்?’ என்று முணுமுணுக்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் அஷ்மிதா. இவருக்குள் இருந்த திறமையை இவருக்கே அறிமுகப்படுத்தியவர் என்று சவின்யாவைத்தான் சொல்ல வேண்டும். சவின்யாவுடன் நடந்த இழுபறியில்தான் அஷ்மிதாவின் உக்கிரம் ஆவேசமாக வெளிப்பட்டது. 

இத்தனை வாரங்கள் எப்படியோ தப்பித்த அஷ்மிதா, ஒரு வெற்றிகரமான டாஸ்க்குடன் வெளியேறியது நல்ல கிளைமாக்ஸ். தன் மீது பலருக்கும் சந்தேகம் வருகிறது என்பது தெரிய வந்தவுடன் அழுகை நாடகம் போட்டு அதை திசை திருப்பியது நல்ல மூவ். வினோத், அசார் போன்றவர்களே இதில் பலியாகி ‘இந்தப் பொண்ணு செஞ்சிருக்காதுப்பா’ என்று மயங்கும் அளவிற்கு அஷ்மிதாவின் ஃபர்பாமன்ஸ் இருந்தது. 

தேவையில்லாத ஆணியாக ஆடிய அக்ஷிதா


அடுத்தது அக்ஷிதா. வீட்டில் சண்டைக்கோழிகளாக இருந்த அண்ணனும் தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பாசமலர்களாக கண்ணீர் விட்டது சுவாரசியமான முரண். ‘நாங்க ரெண்டு பேரும் இந்தப் பழி வரக்கூடாதுன்னு தள்ளித்தான் இருந்தோம்’ என்று சொல்வதில் ஒருவேளை  உண்மையிருந்தாலும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அக்ஷிதா வீட்டிற்குள்  நுழைந்த அடுத்த கணமே அவருடன் டீமாக இணைந்து டாஸ்க் ஆடினார் அவினாஷ். அவினாஷிற்கு கோபம் வரும் போதெல்லாம் ‘டேய் நிறுத்துடா’ என்று ஸ்பீட் பிரேக்கராக மாறுவது அக்ஷிதாவின் பழக்கமாக இருந்தது.  ஒரு கட்டத்தில் அக்ஷிதாவே இன்னொரு அவினாஷ் போல கோபம் கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். வாசனுடன் நடந்த சண்டை இதற்கு உதாரணம். 


ஆக.. அக்ஷிதாவால் இந்த ஷோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஷாதிகாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த முகேஷை தன் பக்கம் ஈர்த்தது மட்டுமே அவரது சாதனை. 

வழக்கம் போல் இந்த வாரமும் நிறைய சிக்சர்களை அடித்தவர் முனியம்மாள்தான். மற்றவர்கள் ஷாப்பிங் போகும் போதெல்லாம் ‘பாவக்கா எடுக்கலை.. பச்சை மிளகாய் எடுக்கலை’ என்று எகத்தாளம் பேசிக் காெண்டிருந்த முனியம்மாளிற்கு செக் பாயிண்ட் வைக்கும் விதமாக ‘அடுத்த வாரம் முனியம்மாள்தான் ஷாப்பிங் போகணும்’ என்று விசே சொன்னது சுவாரசியம். அதன் மூலம் சிறப்பான சம்பவம் நடக்கும் என்பது உறுதியாயிற்று. 


பலரும் எதிர்பார்த்தது போலவே ஷாப்பிங்கில் சொதப்பி ஒரு வருடத்திற்கான பால் விலையை போர்டில் எழுதினார் முனி. டார்க் காமெடி படத்தைப் பார்ப்பது போலவே திகிலும் சிரிப்புமாக முனி செய்த சொதப்பல்களை டிவி வழியாக போட்டியாளர்கள் பார்த்தனர். டாஸ்க் முடித்து வரும் போது “ஏன்யா.. எல்லோரும் அமைதியா இருக்கீங்க?’ என்று பயந்து பம்மினார் முனி.  

bigg boss 10
bigg boss 10

ஷொ்லக் ஹோம்ஸாக மாறி துப்பறிந்த முனியம்மாள்

முனியின் சொதப்பல் காரணமாக ஷாப்பிங் பொருட்கள் பாதியாக குறைந்து விடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள். அது நிகழட்டும் என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் முனியம்மாள் அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘இன்னமும் பிக் பாஸ் சொல்லல இல்ல. அப்புறம் என்ன?” என்று சமாளித்துக் கொண்டிருந்தார். 

அந்த நேரமும் வந்தது. பாயிண்ட்ஸ் அதிகமாக இருந்ததால் பொருட்கள் பாதியாக குறைக்கப்பட்டன. ஷாப்பிங் பொருட்களை அகாடமியின் பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று பிக் பாஸ் அறிவித்தார். உடனே முனியம்மாள் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். “அப்ப பாதி பொருள் வந்தது கரெக்ட்டுதான் போல”. என்னவொரு சாமர்த்தியம்?!

போலவே மர்டர் கேஸ்களிலும் முனியம்மாவின் துப்பறியும் திறமை அபாரமாக வெளிப்பட்டது. தன் மீது காஃபி கொட்டப்பட்ட போது கூட தன்யாவிற்கு சந்தேகம் வரவில்லை. அத்தனை வெள்ளந்தியாக இருந்தார். ஆனால் இதை சரியாக கவனித்து விட்ட முனி “காஃபி கொட்டினா கீழேதான் கொட்டும். மேல எப்படி கொட்டுச்சு. அது கால் தவறின மாதிரி தெரியல” என்று பல சந்தேகங்களை எழுப்பினார். லட்சுமிபிரியாவிற்கு பூ வைத்த சம்பவத்திலும் காமிராவின் அசைவுகளைக் கவனித்து சரியாக சந்தேகப்பட்டார். 

‘நான் சரியா ஃபர்பார்ம் பண்ணலைன்னு பிக் பாஸ் திட்டிட்டாரு” என்று அஷ்மிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் போது, “பிக் பாஸ் அப்படியெல்லாம் திட்ட மாட்டாரே.. மோட்டிவேட்தான் பண்ணுவாரு’ என்று சரியான பாயிண்ட்டைப் பிடித்தார் முனி. “எனக்கு வெங்காயம் வெட்டித் தரியா?” என்று அஷ்மிதா இயல்பாக கேட்ட போது “அய்யய்யோ. நான் மாட்டேன்… அதுவும் டாஸ்க்கா இருக்கலாம். நான் சாக விரும்பலை” என்று பதறியபடி முனி மறுத்தது நல்ல நகைச்சுவை. ‘உனக்கும் உனக்கு மேல இருக்கறவனுக்குத்தான் உண்மை தெரியும். இதுதான் நான் சொல்ற ஜோசியம்” என்று ஜோதிலட்சுமியாகவே மாறி குறி சொன்ன முனியம்மாளின் ஆட்டம் வெகு ஜோர். 

எல்லாவற்றையும் கவனித்து விட்டு ‘அஷ்மிதா பிரதான குற்றவாளி, ஜேசன் அல்லது ஷாதிகா கூட்டாளி’ என்று ஏறத்தாழ சரியாக யூகித்து விட்டார் முனி.  தன் சந்தேகங்களையெல்லாம் விசாரணை அதிகாரியான வாசனிடம் அவர் சொன்ன போதும் வாசன் அவற்றை புறக்கணித்தது வேடிக்கை. ‘பிக் பாஸ்.. இவனையா வெசாரிக்க அனுப்பிச்சீங்க.. வௌங்கினா மாதிரிதான்” என்று முனியம்மாள் அலுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சரியாக சந்தேகப்பட்ட முனியம்மாளையே ‘இவர்தான் குற்றவாளி’  என்று விசாரணை அதிகாரி கண்டுபிடித்ததுதான் வேடிக்கை. ‘வாசனுக்கு சிறப்பா திருட மட்டும்தான் தெரியும். திருட்டை கண்டுபிடிக்க தெரியாது” என்று ஷாதிகா அடித்த கமெண்ட் சூப்பர். 

ஜேசனின் EVP தியாகம் - உண்மையானதா, யுக்தியா?

அஷ்மிதாவிற்கு கச்சிதமான கூட்டாளியாக இருந்து செயல்பட்டார் ஜேசன். அக்ஷிதாவுடன் அவருக்கிருந்த நெருக்கமான நட்பை வைத்து “நான் பொதுவுல ஐ லவ் யூ சொல்வேன். நீ பதில் சொல்லணும்” என்று சொல்லி வைத்து பின்பு பொதுவில் டான்ஸ் ஆடியதெல்லாம் சாமர்த்தியம். இந்த டாஸ்க்கை இழுத்து இழுத்து நிதானமாக ரசித்து செய்தார் ஜேசன். பலருக்கும் அஷ்மிதா மீது சந்தேகம் பரவத் துவங்கிய போது அதை திசை மாற்றி பிருத்வியின் மீது சந்தேகம் வரச் செய்த ஜேசனின் பிளான் சிறப்பானது. 

இதுவரையான பிக் பாஸ் சீசன்களைப் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். ரேங்கிங் டாஸ்க்கில் முதன்மை இடத்திற்கு போட்டியிடாதவர்கள், விசாரணை நாளில் செமயான டோஸ் வாங்குவாாகள். “ஏன் உங்கள் மீதே நம்பிக்கையில்லையா.. உங்களுக்காக நீங்கள்தானே போட்டியிட வேண்டும். இதற்காக மக்கள் வாக்களித்து இருக்க வைக்கிறார்கள்?’ என்கிற வழக்கமான அர்ச்சனைகள் நடக்கும். போட்டியாளர்களும் இதைப் பார்த்திருக்கலாம். எனில் தனயாவைத் தவிர மற்றவர்கள் ஏன் முதன்மை இடங்களுக்கு போட்டியிடவில்லை?  அது ஒப்புக் கொள்ளப்படுகிறதோ, இல்லையோ, முதல் இடம் வேண்டுமென்கிற ஆசை கூடவா இல்லை?

முதல் இடத்திற்கு வலுக்கட்டாயமாக போட்டியிட்ட ஜேசன் அதற்கு தகுதியானவரா என்பது இறுதி மேடையில் தெரியும். இப்போதைய நிலவரப்படி வினோத் அல்லது அன்சர்தான் முதல் இரண்டு இடங்களுக்கு தகுதியானவர்கள். “இந்த ஷோவிற்காக எல்லாவற்றையும் செய்ய நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எனக்கென்று அடிப்படை நியாயங்கள் இருக்கு” என்று வினோத் சொன்ன காரணம் நன்று. 

bigg boss 10
bigg boss 10

பட்டியலில் தான் இருந்த நிலையிலும்  எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அவினாஷிற்கு தர முடிவு செய்த ஜேசனின் மூவ் வித்தியாசமானது. எவருமே இதை செய்யத் துணிய மாட்டார்கள். “என்னுடைய எதிரியா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணும்’ என்பது ஒரு திரைப்பட வசனம். அதைப் போல ‘He is my best Enemy’ என்று ஜேசன் சொன்ன காரணம் சிறப்பானது. 

அதுவரை சண்டைக்கோழியாக தன்னிடம் மோதிக் கொண்டிருந்த ஜேசன், சட்டென்று இந்த தியாகத்தைச் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் திகைத்து கண்ணீர் விட்டார் அவினாஷ். இனி மேல் அவரால் ஜேசனை முழு சக்தி கொண்டு மோத முடியுமா என்று தெரியவில்லை. இந்தத் தியாகம் ஒரு குற்றவுணர்ச்சியாக நின்று கொண்டேயிருக்கும். அவரை பலவீனப்படுத்தும். இதுவும் கூட ஜேசனின் ஒரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கலாம்.  இந்த தியாகத்தால் பார்வையாளர்களிடமிருந்து ஜேசனுக்கு பாராட்டும் கிடைக்கும். 

தான் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்பதை ஜேசன் உணர்ந்திருந்ததால்தான் இந்த தியாகத்தைச் செய்ய முன்வந்தார் என்று தோன்றுகிறது.  கடந்த வாரங்களில் ஷமாவும் இதே போன்றுதான் பாஸை உபயோகிக்காமல் தன் திறமையை நம்பி பலியானார். ‘ஷமா பாஸை உபயோகித்திருக்கலாம்’ என்பதே பலரின் அனத்தலாக இருந்தது. இப்படியொரு நிலையில் மற்றவருக்காக பாஸை தியாகம் செய்தது ஜேசனின் பெரிய மூவ். 

இந்த வாரம் பிக் பாஸ் லீவாம் -  ஆட்டம் சுவாரசியமாகுமா?

ஏதோவொரு கட்டத்தில் அவினாஷ் கலங்கிய போது “இங்க எல்லோருமே இன்னொருத்தரை போட்டியாளராத்தான் பார்ப்பாங்க. அப்படி பார்த்தாதான் கேம் சுவாரசியமா இருக்கும். அதை நாமதான் ஹாண்டில் பண்ணணும்” என்று ஜேசன் ஆறுதல் சொன்னதை பிக் பாஸே பாராட்டினார். 

அஷ்மிதாவின் எவிக்ஷன் போது ‘அசுர வளர்ச்சி’ என்று பாராட்டினார் பிக் பாஸ். ‘வேற யாரையாவது போட்டுத் தள்ளணும்னா எனக்கு போன் பண்ணுங்க பாஸ்’ என்று அந்தச் சமயத்தில் அஷ்மிதா சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போலவே மேடையில் விடைபெறும் போது ‘ஐ லவ் யூ’ என்று இயல்பாக சொன்னார் அஷ்மிதா. வீட்டில் இருந்த போட்டியாளர்களும் பதிலுக்கு ‘ஐ லவ் யூ டூ’ என்று சொன்னார்கள். மாறாக “அய்யய்யோ.. அவங்க ஐ லவ் யூ சொன்னா பதில் சொல்லாதீங்க.. இதுவும் டாஸ்க்கா இருக்கலாம்” என்று அன்சர் சொல்லியிருந்தால் ரகளையாக இருந்திருக்கும். 

bigg boss 10
bigg boss 10

இந்த வாரம் பிக் பாஸ் தீபாவளிக்காக விடுமுறை எடுத்து ஊர் சென்று விட்டார் போலிருக்கிறது. எனவே ‘குரல் இல்லாத பிக் பாஸ் இல்லம்’ என்று வரலாற்றில் இல்லாத மாற்றத்தைச் செய்திருக்கிறார்களாம். ‘சின்ன பகவதி’ போல ‘சின்ன பிக் பாஸாக’ வினோத் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். எனவே இந்த வாரம் என்னென்ன சுவாரசியங்கள் நிகழ்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

ஜேசனின் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் தியாகம் உண்மையானதா அல்லது அதுவும் ஒரு ஸ்ட்ராட்டஜிதானா? கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User