புதிய கட்சி தொடங்கும் பிளானில் அண்ணாமலை? இன்று டெல்லி பயணம்! | Live updates
டெல்லி செல்லும் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அங்கே பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்திப்பது அவரது பிளான் என்று கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்று ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் அண்ணாமலைக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. பிரசாரத்தில் மட்டும் தலைகாட்டிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில், அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கிறார் என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்காகத் தான் அவர் இந்த டெல்லி பயணம் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை உடனடியாக கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தது தான் இந்தப் பேச்சிற்கு இன்னும் வலு சேர்க்கிறது.
திருச்சி செல்கிறார் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நின்று களம் கண்டார்.
இந்த இரண்டு தொகுதிகளிலுமே மக்கள் விஜயைத் தான் தங்களது எம்.எல்.ஏவாக தேர்வு செய்தனர்.
ஆனால், ஒரே ஒரு தொகுதியில் தான் எம்.எல்.ஏவாகத் தொடர முடியும் என்கிற நிலையில், திருச்சி கிழக்கில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.
இதையடுத்து தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி செல்கிறார் விஜய்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்று முடித்த பிறகுமே, இன்னும் தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
ஆக, இன்றைய தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான செய்திகளை இந்த 'Live Blog'-ல் தெரிந்துகொள்ளுங்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)