Allu Arjun: 'மீண்டும் டைரக்ஷன்'- அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறாரா பேசில் ஜோசப்?

Jul 15, 2026 - 12:31
0
Allu Arjun: 'மீண்டும் டைரக்ஷன்'- அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறாரா பேசில் ஜோசப்?

நடிகர் பேசில் ஜோசப் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலையில் பரபரப்பாக இருந்துவருகிறார். கடந்த மே மாதம் இவர் நடித்திருந்த 'அதிரடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நஸ்லெனின் 'மாலிவுட் டைம்ஸ்' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பேசில் ஜோசப். கடந்த சில மாதங்களாகவே பேசில் ஜோசப், அல்லு அர்ஜுனை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டன.

Basil Joseph
Basil Joseph

'அதிரடி' படத்தின் புரோமோஷன் சமயத்தில் இது பற்றிய கேள்விகளுக்கு, "இதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. இப்போது சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன" எனச் சூசகமாகப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தத் தகவலை உறுதிசெய்யும் வகையில் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், 'ஐகான்' எனப் பெயர் பொறித்த தொப்பியை அவர் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவை, அல்லு அர்ஜுனின் 'ஆர்யா 2' படத்தின் 'ரிங்க ரிங்கா' பாடலுடன் பதிவிட்டிருக்கிறார்.

'ஐகான் ஸ்டார்' என்பதுதான் அல்லு அர்ஜுனின் படங்களில் அவருடைய டைட்டில் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.

பேசில் ஜோசப் சூசகமாக அப்டேட் கொடுத்திருக்கிறார் என சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் 'ராக்கா' படத்தில் நடித்துவருகிறார்.

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்த லைன் அப்போடு தற்போது பேசில் ஜோசப் இயக்கும் படம் இணைந்திருக்கிறது எனவும், இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User