“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” - பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

Oct 13, 2026 - 11:30
0
“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” - பழனிவேல் தியாகராஜன் கண்டனம்

சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு சென்று, நேற்று தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது.

‘இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்வெட்டு’ என்று மின்வாரியம் கூறினாலும், ‘தலைமைச் செயலகத்தில் கூட மின்வெட்டா?’ என்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.35-க்கு ஒரு யூனிட்

இந்த நிலையில்தான், தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரம் எனக் கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று நேற்று (அக்டோபர் 12) தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மின்சாரம்
மின்சாரம்

பி.டி.ஆர் பதிவு

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“குறைந்த விலை முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டை 35 ரூபாய்க்குப் கொள்முதல் செய்வது என்பது நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் உள்ள கடுமையான திறமையின்மையையே காட்டுகிறது... அல்லது மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமேதான்...” என்று பதிவிட்டுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User