``மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

Oct 27, 2026 - 17:01
0
``மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழக மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

ஆவின் பொருள்கள்
ஆவின் பொருள்கள்

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள். முதலமைச்சர் அவர்களே ?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User