பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

Oct 29, 2026 - 18:30
0
பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது வேட்டக்குடி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பாப்பாத்தி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர், பாப்பாத்தியிடம் இருந்து நகையைப் பறித்தவர்களை இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர். 15 கிலோமீட்டர் வரை அவர்களை துரத்திச் சென்றனர்.

பெரம்பலூர்

அப்படி, அரியலூர் அருகே ஒருவரைப் பொதுமக்கள் பிடித்த நிலையில், மற்றொருவர் ஏரியில் மறைந்திருந்தபோது போலீஸாரிடம் சிக்கினார். போலீஸாரின் விசாரணையில் சாரதி என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியிடம் இருந்து நகையைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றவர்களை பொதுமக்கள் சினிமா பாணியில் வாகனங்களில் சேஸிங் செய்து துரத்திச் சென்று பிடித்துள்ள சம்பவம், கவனத்தை ஈர்த்திருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User