'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மூலம் டிரெண்டான பாடல் - மீண்டும் உயிர்பெற்ற 30 வருட பழைய சினிமா!

Oct 14, 2026 - 21:30
0
'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மூலம் டிரெண்டான பாடல் - மீண்டும் உயிர்பெற்ற 30 வருட பழைய சினிமா!

சமீபத்தில் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம்.

இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'அன்னா' என்கிற ஒரு மலையாளப் படத்தின் 'எவன கதையில்' என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் படமும், இந்தப் பாடலும் பெரியளவில் பேசப்பட, கைவிடப்பட்ட அந்த 'அன்னா' படத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்கள்.

Anna Movie Malayalam
Anna Movie Malayalam

பிரபல இயக்குநர் ஜோஷி இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் 'அன்னா' படம் எடுப்பதாக அப்போது அறிவிப்பு வெளியானது.

ஆனால், அப்படத்தில் தான் நடிப்பதாகக் கமிட் செய்யவில்லை என்பதைச் சமீபத்திய பேட்டியில் அரவிந்த்சாமி தெரியப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்காக 8 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஆடியோ கேசட்டாகவும் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு காட்சிகூடப் படமாக்கப்படாமல் கைவிடப்பட்டது.

'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தின் மூலம் இப்படமும், இப்பாடலும் பேசப்பட்ட நிலையில், மலையாளத்தில் 'புலிமுருகன்', 'போக்கிரி ராஜா' போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் டோமிச்சன் முளகுபாடத்தின் 'முளகுபாடம் ஃபிலிம்ஸ்' நிறுவனம், 'அன்னா' திரைப்படத்தின் தயாரிப்பு உரிமையை வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

Bethlehem Kudumba Unit
Bethlehem Kudumba Unit

இது குறித்துப் பதிவிட்டுள்ள டோமிச்சன் முளகுபாடம், "30 ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோன 'அன்னா' படத்தின் உரிமையைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய எழுத்தாளர்கள் மற்றும் புதிய குழுவினருடன் இப்படத்தை நவீனக் காலத்திற்கேற்ப மீண்டும் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User