திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

Nov 05, 2026 - 15:00
0
திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 24-ம் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. அன்று அதிகாலை கோயிலுக்குள் பரணி தீபமும், கோயில் பின்புறத்தில் உள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும்.

மலைமீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாள்கள் காட்சித் தரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் தீபங்களை கண் குளிரப் பார்த்து தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் நாடு முழுவதுமிருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

மகா தீபம்

இந்த நிலையில், தீப மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க். கடந்த காலங்களில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில்தான் 2024 ஆண்டு கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன்தொடர்ச்சியாக தீப மலையில் நிலச்சரிவு உண்டானது. இதனால், உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 2 ஆண்டுகளாக மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User