தமிழகத்தில் நேற்று 11 கொலைகள்: " அகந்தையில் வாழும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை" - கனிமொழி

Nov 09, 2026 - 13:30
0
தமிழகத்தில் நேற்று 11 கொலைகள்: " அகந்தையில் வாழும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை" - கனிமொழி

நேற்று (நவம்பர் 8) தீபாவளி அன்று தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளன.

இந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையைச் சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன.

ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை.

முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User