"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

Sep 28, 2026 - 12:00
0
"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.27) சென்னையில் நடைபெற்றது.

'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'
'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'

இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ். எஸ் ராஜமௌலி கலந்துகொண்டிருக்கிறார். அப்போது சென்னை குறித்து பேசியிருக்கும் அவர், " பள்ளி அல்லது கல்லூரியை முடித்தப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து அந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் எப்படி ஒரு உணர்வு இருக்குமோ அதே மாதிரியான உணர்வு தான் நான் சென்னைக்கு வரும்போது இருக்கும்.

இங்கு தான் சினிமா கற்றுக்கொண்டேன். சென்னை எனக்கு ஒரு சிறந்த இடம். இங்கு வரும்போது எனக்கு நிறைய நினைவுகள் வரும். என்னுடைய முதல் காதல் சினிமா தான்.

எஸ். எஸ் ராஜமௌலி
எஸ். எஸ் ராஜமௌலி

இந்த சென்னையில் தான் சினிமா மீது காதல் கொண்டேன். சரவணபவன் உணவு பிடிக்கும். அந்த உணவகத்தில் எல்லோருக்கும் இட்லி, தோசை பிடிக்கும். ஆனால் எனக்கு குறிப்பாக அங்கிருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும்" என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User