மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.
இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, மருத்துவமனை வரை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரைக் காண பொதுமக்கள் அதிகளவில் சாலையோரங்களில் கூடி நின்றதால், முதல்வர் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டே மக்களை பார்த்து கை அசைத்து கொண்டே வந்தார்.
மருத்துவமனைக்கு வந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் சப்தத்தோடு அவரை வரவேற்றனர். தொடர்ந்து விழா மேடைக்குச் சென்றார் முதல்வர் விஜய். மொத்தம் 27 பயனாளிகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார் முதல்வர். இதில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும்
வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

மீதமுள்ள 24 குழந்தைகளின் தாய்மார்களுக்கு மேடைக்கு கீழே இறங்கி சென்று தங்க மோதிரம் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளின் துணியிலும் முதல்வர் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)