சிறைபிடிக்கப்பட்ட 25 தூத்துக்குடி மீனவர்கள்; ரூ.4.80 கோடி அபராதம் விதித்த மாலத்தீவு அரசு

Oct 28, 2026 - 15:00
0
சிறைபிடிக்கப்பட்ட 25 தூத்துக்குடி மீனவர்கள்; ரூ.4.80 கோடி அபராதம் விதித்த மாலத்தீவு அரசு

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த சூசை பாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான் சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் என மொத்தம் 25 மீனவர்கள் கடந்த 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தருவைகுளத்திலிருந்து செளவுள் விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குச் சென்றனர்.

அவர்கள் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் மாலத்தீவிலிருந்து சுமார் 150 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

தருவைகுளம் மீன்பிடித்துறைமுகம்
தருவைகுளம் மீன்பிடித்துறைமுகம்

அப்போது அங்கு ரோந்து வந்து மாலத்தீவு கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். மாலத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி 3 படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறை பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களைக் கைது செய்து, 3 படகுகளையும் கடந்த 14-ம் தேதி மாலத்தீவுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மூன்று படகுகளின் உரிமையாளர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.1 கோடியே 60 லட்சத்து 24 ஆயிரம் அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, விவசாயம் மற்றும் கடல் வளங்கள் அமைச்சகத்தின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சத்து 72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.

தருவைகுளம் மீன்பிடித் துறைமுகம்
தருவைகுளம் மீன்பிடித் துறைமுகம்

தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாலத்தீவில் தவிக்கும் 25 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User