சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

Oct 15, 2026 - 20:30
0
சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அந்த சாலை வழியாக சரக்கு ஆட்டோவின் பின்னால், கான்கிரீட் கலவை இயந்திரத்தை இணைத்து இழுத்துச் சென்றனர். அந்த இயந்திரம், திடீரென கழன்று ஓடியதில், சாலையோரமாக மீன் விற்றுக் கொண்டிருந்த செல்வராணி மற்றும் மீன் வாங்க வந்த மணிவேல் ஆகியோர் மீது மோதி உள்ளது.

trichy

இதில், பலத்த காயமடைந்த செல்வராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மணிவேல், தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு, இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு, தப்பி ஓடிய சரக்கு ஆட்டோ டிரைவர் சந்திரன் என்பவரை தேடி வருகின்றனர். கான்க்ரீட் இயந்திரம் மோதி சாலையோரம் மீன்விற்ற பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User