கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

Oct 22, 2026 - 14:00
0
கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16), கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அகிலன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து கெளசல்யா தேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “வகுப்பறையில் யாரெல்லாம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருக்கிறீர்கள் எனவும், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் எனவும் ஆசிரியர் விஜயகுமார் கேட்டபோது, என் மகன் உள்ளிட்ட மாணவர்கள் எழுந்து நின்றுள்ளனர்.

அப்போதிருந்து சக மாணவர்கள் இருவர் என் மகனை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் விஜயகுமாரிடம் கூறியபோதும், சாதிய உள்நோக்கத்துடன் அந்த மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்துள்ளார்.

school
school

சாதிய ரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவது குறித்தும், சக மாணவர்கள் விளையாட்டில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது குறித்தும் தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அகிலன் தற்கொலை செய்து கொண்டான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் விஜயகுமார் பீளமேடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தலைமையாசிரியர் அருண்குமாரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User