ராணிப்பேட்டை: பெண் குழந்தை மாயம் - ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்!

Oct 21, 2026 - 18:30
0
ராணிப்பேட்டை: பெண் குழந்தை மாயம் - ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை இருந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இரவு ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர்ப் பகுதியில் பழைய பொருள்களைச் சேகரித்துவிட்டு, சாலையோரமாக குழந்தையுடன் படுத்து தூங்கினர்.

நள்ளிரவு 1 மணியளவில், குழந்தை மகேஸ்வரி காணாமல் போயிருக்கிறாள். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் மறுநாள் 24-ம் தேதி சிப்காட் காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கின்றனர்.

காவல்துறை அறிவிப்பு

புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடினர். குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் குழந்தையின் புகைப்படத்துடன்கூடிய அறிவிப்பையும் போலீஸார் வெளியிட்டிருந்தனர். குழந்தை பற்றிய துப்பு கிடைக்காததால் போலீஸார் வழக்கு விசாரணையைக் கிடப்பில் போட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, குழந்தை மாயமான வழக்கின் விசாரணையை ஏ.டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். குழந்தை மாயமாகி ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், குழந்தைக்கு என்ன ஆனது? என்பது பற்றி நினைத்து பெற்றோர் மிகுந்த வேதனையில் தவித்து வருகிறார்கள். எவ்விதத் தடயமும் கிடைக்காமல் போலீஸாரும் திணறி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User