டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் படத்தைப் பாராட்டி இருக்கும் இயக்குநர் ராஜூமுருகன் , "'டோரதி' தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பாலின ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய், அழகாய், ஆங்காரமாய் நம்முன் நிமிர்ந்து நிற்கிறாள் இந்த டோரதி.
பேசா பொருளைப் பேசத் துணிந்து, அதை இவ்வளவு அற்புதமாய் செய்திருக்கும் தோழன் கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி கார்த்தி.
மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கும் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அத்தனை நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
கடும் நெடும் பயணங்களில் தீரவே தீராத காதலாய் உடன் வரும் ராஜா சாருக்கு நன்றியைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்..!"- பாராட்டி இருக்கிறார்.
அதேபோல இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டிருக்கும் பதிவில், "'டோரதி' போன்ற ஒரு திரைப்படம் தமிழ் திரையுலகில் இருந்து வந்ததற்கு நான் பெருமை அடைகிறேன்.
இந்த அற்புதமான படைப்பை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இருக்கும் இதே துறையில் நானும் ஒரு அங்கமாய் இருப்பதில் பெருமைக்கொள்கிறேன். கார்த்திக் சுப்புராஜுக்கு சல்யூட்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)