மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பிரியாங்கா காந்தியின் பேச்சால் குலுங்கி சிரித்த அமித் ஷா; என்ன நடந்தது?

Apr 17, 2026 - 09:02
 0
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பிரியாங்கா காந்தியின் பேச்சால் குலுங்கி சிரித்த அமித் ஷா; என்ன நடந்தது?

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்கள், மற்றும் யூனியர் பிரதேசங்களில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா என மூன்று மசோதாங்கள் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டன.

இதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

அதேநேரம், தொகுது மறுசீரமைப்பு மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த மசோதா குறித்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி உரையில், ``மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும், தற்போதைய விவாதம் அந்த ஆதரவைப் பற்றியது அல்ல. மாறாக இந்த மசோதாவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுவது குறித்தே விவாதம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த மகளிர் இடஒதுக்கீடு நடவடிக்கை என்பது, உண்மையில் NDA தலைமையிலான மத்திய அரசு தனது தேர்தல் ஆதாயத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு 'அரசியல் துருப்புச்சீட்டு'.

பெண்கள் உரிமைகளுக்காக பா.ஜ.க எவ்வாறு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது முந்தைய உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசியலமைப்பைச் சிதைப்பதன் மூலமே பா.ஜ.க தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறது.

நீங்கள் அனைவரும் முழுமையான திட்டமிடலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இன்று சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் தந்திரத்தைக் கண்டு அவரே திகைத்துப்போயிருப்பார்" என்றார். அப்போது அமித் ஷா, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பிற பா.ஜ.க எம்.பி.க்களிடையே பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய பிரியாங்கா காந்தி, ``பா.ஜ.க-வினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் பொய் பேசுபவர்களைக் கண்டறிவதில் பெண்கள் மிகவும் வல்லவர்கள். இன்று பிரதமர் ஆற்றிய உரை, மகளிர் இடஒதுக்கீட்டிற்காகப் போராடிய முன்னோடிகளாகவும், அதை முன்னெடுத்தவர்களாகவும், அதன் மிகப்பெரிய ஆதரவாளர்களாகவும் பா.ஜ.க-வே திகழ்ந்து வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கான எந்தப் பெருமையையும் தான் கோரவில்லை என்று அவர் கூறியபோதிலும், அவரது உரை முழுவதும் இந்த ஒரு கருத்தே மையப்பொருளாக அமைந்திருந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

2023-ம் ஆண்டில் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வாசித்த பிறகே பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு இந்தச் சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. அப்போதே இந்திய தேசிய காங்கிரஸ் தனது கொள்கைக்கு இணங்க இதற்கு முழு ஆதரவை அளித்தது. எங்கள் கட்சி எப்போதும் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும். இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்த நாட்டில் ஜனநாயகம் என்பதே முடிவுக்கு வந்துவிடும்.

மகளிர் இடஒதுக்கீடு நடவடிக்கைக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகத் தாக்கும் நோக்கில் அமைந்திருந்தது. இது குறித்துச் சற்றுப் பின்னணியை விளக்க விரும்புகிறேன்.

ஏனெனில், இதை யார் தடுத்தார்கள், எவ்வாறு தடுத்தார்கள், மற்றும் இந்த முடிவு கடந்த 30 ஆண்டுகளாக எவ்வாறு முடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து பிரதமர் தனது உரையில் விரிவாகப் பேசியிருந்தார். ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு இப்போது நான் சொல்லும் செய்தி எரிச்சலைத் தரலாம். ஆயினும், வரலாற்றுப் பின்னணி என்னவென்றால், இதற்கான முன்னெடுப்பை முதலில் தொடங்கியவர் 'நேரு' எனும் ஒருவரே.

பிரியாங்கா காந்தி
பிரியாங்கா காந்தி

ஆனால் கவலைகொள்ள வேண்டாம். நீங்கள் எவரிடமிருந்து விலகி நிற்கிறீர்களோ, அந்த நேரு இவர் அல்ல. அவரது தந்தையாரான மோதிலால் நேரு, 1928-ம் ஆண்டில் ஒரு அறிக்கையைத் தயாரித்து, அதை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், 19 அடிப்படை உரிமைகளைப் பட்டியலிட்டிருந்தார். 1931-ம் ஆண்டில், சர்தார் வல்லபாய் படேலின் தலைமையில் கராச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்தக் கராச்சி மாநாட்டில்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே, பெண்களுக்கான சம உரிமைகள் நமது நாட்டின் அரசியலின் ஒரு அங்கமாக மாறுவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதே சமயத்தில், 'ஒரு வாக்கு, ஒரு குடிமகன், ஒரு மதிப்பு' எனும் கோட்பாடும் நமது அரசியலில் நிலைநாட்டப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த உரிமையைப் பெறுவதற்காக மக்கள் 150 ஆண்டுகள் காத்திருந்து போராட வேண்டியிருந்தது. நமது நாட்டின் அரசியல் அமைப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்பது உலக அளவிலேயே ஒரு தனித்துவமான நடவடிக்கையாக அமைந்தது.

நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் மசோதா, தனது மறைந்த தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசால் முதன்முதலில் இச்சபையில் கொண்டுவரப்பட்டது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0