அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்
எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர். 
மத்திய இணை அமைச்சர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எல்.முருகன் பா.ஜ.க - வின் முன்னாள் மாநில தலைவர் என மத்திய அரசு மற்றும் பா.ஜ.க- வின் முக்கிய பதவிகளை வகித்தாலும் எல். முருகனுக்கு தேர்தல் அரசியல் வெற்றியாக அமைந்ததில்லை.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவிடம் தோல்வியைத் தழுவினார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து மக்களால் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் ஓட்டு அரசியல் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தான், அவிநாசி தொகுதியை விரும்பித் தேர்வு செய்திருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் எல். முருகன், தொகுதியில் உள்ள மகளிர் வாக்குகளை கவர பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகி ஒருவர், " வாக்காளர்களுக்கு வெறுமனே நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. இதற்காகவே 'வீடு வீடாக மகளிரணி ' என்கிற பெயரில் பா.ஜ.க மகளிர் அணியில் புது குழு உருவாக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறோம். மகளிர் அணி சார்பில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வெற்றி வியூகங்களை க வருகிறோம்.
`முத்ரா கடன் திட்டம்', `ஜல் ஜீவன்' போன்ற பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களை பெண்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். மேலும், பா.ஜ.க - வின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் இல்லத்தரசிகளிடம் எடுத்துரைத்து வருகிறோம். மகளிர் மத்தியில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது" என்றார். எல்.முருகனின் வியூகம் கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0