"தூக்கம் வராத நேரங்கள்ல எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன்!" - பவன் கல்யாண் ஜாலி டாக்

Jun 11, 2026 - 20:33
0
"தூக்கம் வராத நேரங்கள்ல எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன்!" - பவன் கல்யாண் ஜாலி டாக்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான பவன் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்குத் தூக்கம் வராத இரவுகளில் மனதை அமைதிப்படுத்த அவர் கையாளும் பழக்கம் குறித்துப் பேசியிருக்கிறார்.

Pawan Kalyan
Pawan Kalyan

ஜாலியாக அவர் இந்தப் பேட்டியில் பதிலளித்திருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் பவன் கல்யாண், "எனக்கு பேய்ப் படங்கள் பார்ப்பது ரொம்பவே பிடிக்கும். அது நம்மைக் கதையோடு முழுசாக ஒன்றிப் பார்க்க வைத்துவிடும். நம்மை வேறு எதையும் யோசிக்க விடாது.

என் மனதை அது ஒரு இடத்திலேயே கட்டிப்போட்டுவிடும். இல்லையெனில் என் மனசு கண்டதையும் நினைத்துக்கொண்டிருக்கும்.

எனக்குத் தூக்கம் வராத நேரங்களில் எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன். உடனடியாக என் மனதும் அமைதியாகிவிடும்," எனக் கூறியிருக்கிறார்.

0G - பவன் கல்யாண்
OG - பவன் கல்யாண்

மேலும், அந்தப் பேட்டியில் 'துரந்தர்' திரைப்படத்தைப் பாராட்டியவர், "துரந்தர் படத்தின் முதல் பாகம் எனக்குப் பிடித்திருந்தது.

அதன் இரண்டாம் பாகத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டேன். அதனால் பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் படத்தை எடுத்திருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது," என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User