VIT: ரோபோக்களைப் பயன்படுத்தி ஆயுதபூஜை; விஐடி சென்னையில் அசத்தல் கொண்டாட்டம்!

Oct 21, 2026 - 18:30
0
VIT: ரோபோக்களைப் பயன்படுத்தி ஆயுதபூஜை; விஐடி சென்னையில் அசத்தல் கொண்டாட்டம்!

விஐடி சென்னையில் ரோபோக்களை பயன்படுத்தி ஆயுத பூஜை கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.

விஐடி சென்னையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் 16.10.2016 அன்று நடைபெற்றது. விஐடி சென்னை முழுவதும் பேராசிரியர்கள் , ஊழியர்களுடன் இணைந்து விஐடி துணைத்தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆயுத பூஜை கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டார்.

இந்த சூழலில், மாறி வரும் அறிவியல் உலகில் அனைவரும் வியக்கும் வகையில் விஐடி சென்னையின் கணினி அறிவியல் துறை சார்பில் ரோபோக்களால் பூஜைகள் நடத்தப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

ஆயுதப்பூஜை கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வத்தை ஏஐ தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கொண்டு வரவேற்பு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, வணக்கம் தெரிவித்தும் கைகுலுக்கியும் மற்றொரு ரோபோ வரவேற்றது பார்ப்போரை கவரும் வகையில் இருந்தது.

இதை தொடர்ந்து, வேறொரு ரோபோ மெழுகுவர்த்தியில் குத்து விளக்கு ஏற்றியது. இதையடுத்து, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பூஜை பொருட்களை கொண்டு செல்வது, தீபாராதனை காட்டுவது என பூஜைக்கு தேவையான அனைத்து பணிகளையும் ரோபோக்கள் இணைந்து செய்தன.

இவ்வாறு அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User