Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

Oct 13, 2026 - 20:31
0
Vijay: முதல்வர் விஜய்க்கு ஆந்திராவில் உற்சாக வரவேற்பு; இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொண்டது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்-13) ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மாலை 4:00 மணிக்கு விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

ஆந்திர அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அம்மாநில அமைச்சர் பொங்குரு நாராயணா, முதல்வரை வரவேற்று முழுப் பயணத்தின் போதும் அவருடன் இருந்தார். விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான ஆதரவாளர்களும் பொதுமக்களும் பாரம்பர்ய மேளதாளங்கள் முழங்க தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா கோயிலுக்கு மாலை 5:00 மணிக்குச் சென்ற முதல்வர் விஜய், 5:45 மணி வரை நவராத்திரி சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.

வழிபாட்டின் நிறைவில் அவருக்கு கோயில் சார்பில் பிரசாதமும், கனக துர்கா அம்மன் படமும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டது. கோயிலுக்கு வருகை தந்திருந்தபோது, ரசிகர் ஒருவர் முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி இடம்பெற்றிருந்த புகைப்படத்தைக் காட்டி மகிழ்ந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோயில் வழிபாட்டைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் விஜய்யை, சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் மற்றும் அமைச்சர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

தொடர்ந்து, ஆந்திர அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா மற்றும் எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரை விஜய்க்கு சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.

மாலை 6:00 மணி முதல் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையிலான கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் நீர்த் திறப்பு உள்ளிட்ட முக்கிய நீர்சார் விவகாரங்கள் குறித்து இரு முதல்வர்களும் விரிவாக விவாதித்தனர்.

இச்சந்திப்பில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட இரு மாநில உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆலோசனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை 7:10 மணிக்கு புன்னமி காட்டில் உள்ள உத்சவ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் விஜய், தனது பயணங்களை நிறைவு செய்து கொண்டு இரவு 9:00 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10:00 மணிக்குச் சென்னை வந்தடையவுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User