US Fed வட்டி உயர்வு அறிவிப்பிற்கு பின் Gold விலை குறைஞ்சிருக்கணுமே? ஆனால், அப்படி ஆகவில்லையே; ஏன்?

Sep 18, 2026 - 20:31
0
US Fed வட்டி உயர்வு அறிவிப்பிற்கு பின் Gold விலை குறைஞ்சிருக்கணுமே? ஆனால், அப்படி ஆகவில்லையே; ஏன்?

நினைத்தது ஒன்று... நடப்பது வேறாக இருக்கிறது.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.

பொதுவாக இந்த வங்கி தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தும் போதெல்லாம் தங்கம் விலை இறங்கும்.

ஆனால், இந்த முறை மாறாகத் தங்கம் விலை சற்று ஏறியிருக்கிறது.

சர்வதேச சந்தையில் 16-ஆம் தேதி ஒரு அவுன்ஸிற்கு 4,263 டாலர் என்று வர்த்தகமான தங்கம் விலை, நேற்று 4,341 டாலர் என்று வர்த்தகமானது.

Gold Rate - தங்கம் விலை
Gold Rate - தங்கம் விலை

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் போது, வட்டி தரும் வருமானங்கள் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். தங்கம் முதலீடு வட்டி தராது.

அதனால், தங்கத்தில் உள்ள முதலீடுகள் வட்டி தரும் வருமானத்திற்கு மாறும். இதுதான் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயரும் போது, தங்கம் விலை குறையும் லாஜிக்.

ஆனால், இப்போது ஏன் தங்கம் விலை ஏறியது என்பதற்குப் பொருளாதார நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர்.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று ஏற்கெனவே சந்தை கணித்துவிட்டது. இதனால், அப்போதே இந்தத் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலித்துவிட்டது.

இதனால், அறிவிப்பு வெளியானதும், விலையில் பெரிய மாற்றம் நிகழவில்லை.

அடுத்ததாக மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்திருக்கின்றன. குறிப்பாகச் சீனாவின் வங்கிகள் 22-ஆவது மாதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.

உலக அளவில் போர்கள், நிலையற்ற தன்மை என்று இருந்து வருகிறது. இதனால், நாடுகளின் இறையாண்மை குறித்துக் கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கம், நாடுகளின் கடன் சுமையும் கூடுகிறது.

இதனால், வட்டி தரும் வருமானங்களான பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இவையால் தங்கம் விலை குறையாமல் ஸ்டெடியாக வர்த்தகமாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User